×

கரடியிடம் சிக்கிய மனைவி; மரத்தில் ஏறி தப்பிய கணவன்

உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் நேற்று மகேஷி தேவி(47) என்ற பெண்ணை இமயமலை கருப்பு கரடி கடித்து குதறியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்பெண்ணின் கணவர் அசுதோஷ் சிங் மரத்தில் ஏறி உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து வன அதிகாரி அசுதோஷ் சிங், ‘’வாதுக் கிராமத்தை சேர்ந்த மகேஷி தேவி தன் கணவருடன் கால்நடைகளுக்கு புல் வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்றார். புல் வெட்டிக் கொண்டிருந்த போது திடீரென்று இமயமலை கருப்பு கரடி வந்துவிட்டது. உடனே
 

உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் நேற்று மகேஷி தேவி(47) என்ற பெண்ணை இமயமலை கருப்பு கரடி கடித்து குதறியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்பெண்ணின் கணவர் அசுதோஷ் சிங் மரத்தில் ஏறி உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் குறித்து வன அதிகாரி அசுதோஷ் சிங், ‘’வாதுக் கிராமத்தை சேர்ந்த மகேஷி தேவி தன் கணவருடன் கால்நடைகளுக்கு புல் வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்றார். புல் வெட்டிக் கொண்டிருந்த போது திடீரென்று இமயமலை கருப்பு கரடி வந்துவிட்டது. உடனே இருவரும் ஓட்டமெடுத்தனர். கரடி வேகமாக துரத்தி வந்ததும் ஒரு மரத்தில் ஏறி தன்னை காப்பாற்றிக்கொண்டார் கணவர். ஆனால், மகேஷி தேவியால் மரத்தில் ஏற முடியாததால் அவர் கரடியிடம் சிக்கிக்கொண்டு அங்கேயே உயிரிழந்தார்’’ என்று தெரிவித்தவர்,

’’அப்பெண்ணுக்கு சம்பிரதாய சடங்குகள் முடிந்த பின்னர், குடும்பத்தினருக்கு இழப்பு வழங்கப்படும்’’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ‘’குளிர்காலம் தொடங்கிவிட்டாலே கரடிகள் தாக்குதல் அதிகரிக்க தொடங்கிவிடுகின்றன. குளிர்காலங்களில் உணவு தேடி வருகின்றன. இமயமலைகளில் 10 ஆயிரம் , 12 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் கரடிகள், குளிர்காலத்தில் உணவுதேடி5 ஆயிரம் அடிக்கு கிழே வருகின்றன. அப்படி வரும்போதுதான் இதுமாதிரியான தாக்குதல்கள் நடக்கின்றன.

இமயமலை கருப்பு கரடி உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் இருக்கிறது. ஆகவே இவற்றை கொல்லுவதற்கு அனுமதி இல்லை’’ என்று தெரிவித்திருக்கிறார்.