×

ஏமாற்றிய போலீஸ் – உயிருக்கு போராடும் சென்னை கேட்டரிங் மாணவி

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 17வயது சிறுமி, கேட்டரிங் இன்ஸ்ட்டியூட்டில் படித்து வந்தார். இவர் எந்நேரமும் பேஸ்புக், செல்போனே கதி என்று கிடந்திருக்கிறார். அதனால் அவருக்கு இப்படி ஒரு நிலைமை வரும் அவர் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார். அரக்கோணத்தை சேர்ந்த ரமேஷ், புழல் சிறைச்சாலையில் ஆயுத படை பிரிவில் காவலராக இருப்பதாக கூறி, அச்சிருமியிடம் முகநூலில் அறிமுகம் ஆகியிருக்கிறார். அந்த நட்பு காதலாகி இருக்கிறது. இந்த காதல் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து பேசும் அளவுக்கு போயிருக்கிறது.
 

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 17வயது சிறுமி, கேட்டரிங் இன்ஸ்ட்டியூட்டில் படித்து வந்தார். இவர் எந்நேரமும் பேஸ்புக், செல்போனே கதி என்று கிடந்திருக்கிறார். அதனால் அவருக்கு இப்படி ஒரு நிலைமை வரும் அவர் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்.

அரக்கோணத்தை சேர்ந்த ரமேஷ், புழல் சிறைச்சாலையில் ஆயுத படை பிரிவில் காவலராக இருப்பதாக கூறி, அச்சிருமியிடம் முகநூலில் அறிமுகம் ஆகியிருக்கிறார். அந்த நட்பு காதலாகி இருக்கிறது. இந்த காதல் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து பேசும் அளவுக்கு போயிருக்கிறது. இருவரும் தனிமையில் இருக்கும் அளவுக்கும் போயிருக்கிறது.

இந்நிலையில் திடீரென்று சிறுமியுடன் பழகுவதையும் பேசுவதையும் நிறுத்திவிட்டார் மகேஷ். இதனால் மண உளைச்சலில் யாரிடமும் இயல்பாக பேசாமல் இருந்த சிறுமியின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்ததும் அவன் யாரென்று சொல் என்று கேட்க, சொல்லி இருக்கிறார்.


மகள் காதல் விவகாரம் குறித்து மகேஷிடம் பெற்றோர் பேசியபோது, அவர் எனக்கு நண்பர். அவ்வளவுதான் என்றும், நான் போலீஸ். அதனால் என்னை எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்.

இதனாம் மனம் உடைந்த சிறுமி, தன்னை ஏமாற்றிய மகேஷை எப்படியும் பழி வாங்க வேண்டும் என்று, நேற்று முன் தினம் இரவு 11 மணிக்கு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையில் வைத்துள்ளனர். அங்கு அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

தன்னிடம் பாழியல் துன்புறுத்தலில் ஈடுட்டுவிட்டு ஏமாற்றிய மகேஷை பழிவாங்கவே தீக்குளித்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.