×

அவருக்கு வயசு அதிகம்; அதனால் அந்த இளைஞருடன் தான் வாழ்வேன்.. இளம்பெண் பிடிவாதத்தால் குழந்தைகளுடன் கணவன் கண்ணீர்

திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் குமரவேல்(44) என்பவர் தனது குழந்தைகளுடன் வந்து, மனைவி ஆஷா மெர்சியை காணவில்லை என்று புகார் அளித்தார். புகாரின் பேரின் விசாரணை மேற்கொண்டதில் அந்த இளம்பெண், குமார்(25) என்ற இளைஞரை திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் நடத்துவது தெரியவந்தது. திருச்சில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆஷா மெர்சி வேலை பார்த்து வந்தபோது, பீம் நகரை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் செல்வகணபதி விபத்தில் சிக்கி அங்கே அட்மிட் ஆனார். அவரை கவனித்துக்கொள்ள செல்வகணபதி மகன்
 

திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் குமரவேல்(44) என்பவர் தனது குழந்தைகளுடன் வந்து, மனைவி ஆஷா மெர்சியை காணவில்லை என்று புகார் அளித்தார். புகாரின் பேரின் விசாரணை மேற்கொண்டதில் அந்த இளம்பெண், குமார்(25) என்ற இளைஞரை திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் நடத்துவது தெரியவந்தது.

திருச்சில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆஷா மெர்சி வேலை பார்த்து வந்தபோது, பீம் நகரை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் செல்வகணபதி விபத்தில்

சிக்கி அங்கே அட்மிட் ஆனார். அவரை கவனித்துக்கொள்ள செல்வகணபதி மகன் அபிஷேக் அடிக்கடி வந்து போயுள்ளார். அப்போதெல்லாம் ஆஷா மெர்சியைகவனித்து வந்துள்ளார். அபிஷேக்கும் திருமணமானவர்.

கணவனை மறந்து ஆஷாமெர்சியும், மனைவியை மறந்து அபிஷேக்கும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இது காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் போய்விட்டார்கள். குமரவேலுவுடன் 2013ல் திருமணம் செய்துகொண்டு இத்தனை வருடம் வாழ்ந்த வாழ்க்கையை உதறிவிட்டு,அபிஷேக்தான் இனி என் உலகம் என்று இருகிறார் ஆஷா.

அபிஷேக் மனைவியின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆனால், குழந்தைகளுடன் கண்ணீர் வடிக்கும் குமரவேலுவுடன் இனி வாழ முடியாது என்றூ ஆஷா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

அவருக்கு வயது அதிகம். என்னை ஏமாற்றி கட்டிக்கொண்டார். அவருடன் இனி வாழ முடியாது. அபிஷேக்குடன் தான் வாழ்வேன் என்று கறாராக கூறிவிட்டார்.

முறைப்படி விவாகரத்து பெறாமல் திருமணம் செய்துவிட்ட குற்ற உணர்வே கொஞ்சமும் இல்லாமல்.

மகனும், மகளும் அழுததால், குழந்தைகளை வேண்டுமானால் என்னுடன் அனுப்பி வையுங்கள் என்று கூறியிருக்கிறார். அவரை நம்பி குமரவேல் குழந்தைகளை அனுப்பவில்லை.