×

13 வயது சிறுமியை சிதைத்த 400 பேர்: சென்னை பயங்கரத்தில் சிக்கப்போகும் உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள்..

சென்னை வண்ணாரப்பேட்டை சிறுமியின் பாலியல் வன்கொடுமை வழக்கு விஸ்வரூபம் எடுத்து வருகிறது. விசாரணையின் பிடி இறுகுவதால் பல முக்கிய பிரமுகர்களும், அரசு அதிகாரிகளும் சிக்கவிருக்கிறார்கள். அந்த 13 வயது சிறுமியின் பாலியல் வழக்கில் இதுவரைக்கும் போலீஸ் உயரதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என்று 16 பேர் சிக்கி இருக்கிறார்கள். இன்னும் டாக்டர்கள், உயரதிகாரிகள் என்று சிக்க இருக்கிறார்கள்.ஒரு 13 வயது சிறுமியிடம் இத்தனை அக்கிரமமா? என்ற அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கோவளம் பகுதியை சேர்ந்த தாய், சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்த
 

சென்னை வண்ணாரப்பேட்டை சிறுமியின் பாலியல் வன்கொடுமை வழக்கு விஸ்வரூபம் எடுத்து வருகிறது. விசாரணையின் பிடி இறுகுவதால் பல முக்கிய பிரமுகர்களும், அரசு அதிகாரிகளும் சிக்கவிருக்கிறார்கள்.

அந்த 13 வயது சிறுமியின் பாலியல் வழக்கில் இதுவரைக்கும் போலீஸ் உயரதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என்று 16 பேர் சிக்கி இருக்கிறார்கள். இன்னும் டாக்டர்கள், உயரதிகாரிகள் என்று சிக்க இருக்கிறார்கள்.
ஒரு 13 வயது சிறுமியிடம் இத்தனை அக்கிரமமா? என்ற அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கோவளம் பகுதியை சேர்ந்த தாய், சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்த உறவினர் ஷாகிதா பானு கர்ப்பமாக இருந்ததால் அவருக்கு உதவியாக தனது 13 வயது மகளை அனுப்பி இருக்கிறார். உதவிக்கு வந்த அந்த சிறுமியை மோசமான வேலைக்கு பயன்படுத்தி இருக்கிறார் ஷாகிதாபானு. ஏற்கனவே அவருக்கு பாலியல் தொழிலில் அறிமுகம் இருந்ததால், தனது கணவர் மதன்குமார், அவரின் சகோதரி சந்தியா ஆகியோருடன் இணைந்து சிறுமியை வைத்து பணம் சம்பாதித்து விட திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி சிறுமியை அரசியல் பிரமுகர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் அனுப்பி பணம் சம்பாதித்திருக்கிறார்கள். கிழக்கு கடற்கரை சாலை ரெசார்ட்டுகளுக்கும் அனுப்பி வைக்கவே, அங்கு அச்சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.

ஒரு வாரம் பேக்கேஜ் என்ற ரீதியிலும் சிறுமியை அனுப்பி பணம் பார்த்து வந்திருக்கிறார்கள்.

இந்த விபரம் கோவளத்தில் இருந்து சிறுமியின் தாய்க்கு தெரியவரவே, அவர் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் செய்திருக்கிறார். விவகாரம் பெரிதாக இருப்பதால் அந்த காவல்நிலையத்தின் ஆய்வாளர் பிரியதர்ஷினி , குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் விபரத்தை சொல்லி இருக்கிறார்.

பாஜக பிரமுகர்

ஜெயலட்சுமி உத்தரவின் பேரில் பிரியதர்ஷனி அதிரடி நடவடிக்கையில் இறங்கி, ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், தனியார் தொலைக்காட்சி நிருபர் வினோபாஜி, ஷாகிதா பானு, மதன்குமார், சந்தியா, அனிதா, மீனார், முஸ்தபா, கார்த்திக் , அன்சாரி பாஷா உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் 8 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல் ஆய்வாளர் புகழேந்தி

சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலின் உத்தரவின் பேரில் விசாரணையின் பிடி இறுகுவதால், சிறுமியை சிதைத்த வழக்கில் 400 பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் பல முக்கிய பிரமுகர்களும், அரசு உயரதிகாரிகளும் சிக்கவிருக்கிறார்கள் என்றும், சிக்கப்போகும் அந்த பிரமுகர்களின் பட்டியல் நீளுகிறது என்கிறது போலீஸ் வட்டாரம்.

ஷாகிதா பானு