×

கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.12 லட்சம் மோசடி

சென்னை, வளசரவாக்கத்தில் செயல்பட்டு வரும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், கவரிங் நகைகளை கொடுத்து 12 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் 2 ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் சென்னை, ஆலப்பாக்கத்தை சேர்ந்த சத்தியநாராயணன் என்பவர் 440 கிராம் நகைகளை அடகு வைத்து ரூ.8 லட்சமும், ராஜேஸ்வரன் என்பவர் 193 கிராம் நகைகளை அடகு வைத்து ரூ.4 லட்சமும் பெற்றுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அசலும், வட்டியும் செலுத்தாமல் இருந்துள்ளனர்.
 

சென்னை, வளசரவாக்கத்தில் செயல்பட்டு வரும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், கவரிங் நகைகளை கொடுத்து 12 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் 2 ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன் சென்னை, ஆலப்பாக்கத்தை சேர்ந்த சத்தியநாராயணன் என்பவர் 440 கிராம் நகைகளை அடகு வைத்து ரூ.8 லட்சமும், ராஜேஸ்வரன் என்பவர் 193 கிராம் நகைகளை அடகு வைத்து ரூ.4 லட்சமும் பெற்றுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அசலும், வட்டியும் செலுத்தாமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், மீட்காமல் இருக்கும் நகைகள் குறித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும், நகைகளை மீட்க யாரும் வரவில்லை என்பதால் அவற்றை ஏலம் விட வங்கி முடிவு செய்துள்ளது.

இதையடுத்து அந்த நகைகளை மதிப்பீடு செய்தபோது, இருவரும் அடகு வைத்த நகைகள் கவரிங் என தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் அபிநயா வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

2018 ம் ஆண்டு நகைகளை அடகு வைத்தபோது இருந்த நகை மதிப்பீட்டாளர் மாறி விட்டதால் அவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள போலீசார், சத்தியநாராயணன், ராஜேஸ்வரன் ஆகியோர் குறித்து விசாரித்து வருகின்றனர்.