×

115 ரூபாய்க்காக போன் செய்து கேட்ட பிரபல மருத்துவமனை !

சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளி இறந்த பின்பும் சிகிச்சை செலவு பாக்கி ரூ.115 கேட்டு மருத்துவமனை போன் செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளி இறந்த பின்பும் சிகிச்சை செலவு பாக்கி ரூ.115 கேட்டு மருத்துவமனை போன் செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீளமேடு பகுதியில் ஒரு தனியார் பிரபல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பிரபலமான மருத்துவமனையில் கோவை மாநகர மக்கள் பெரும்பாலும் அங்கு சென்று சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
 

சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளி இறந்த பின்பும் சிகிச்சை செலவு பாக்கி ரூ.115 கேட்டு மருத்துவமனை போன் செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளி இறந்த பின்பும் சிகிச்சை செலவு பாக்கி ரூ.115 கேட்டு மருத்துவமனை போன் செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீளமேடு பகுதியில் ஒரு தனியார் பிரபல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பிரபலமான மருத்துவமனையில் கோவை மாநகர மக்கள் பெரும்பாலும் அங்கு சென்று சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலுச்சாமி என்பவர் அந்த பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடந்து சென்று சிகிச்சைக்கு சென்றவர் கடைசியில் சடலமாகத்தான் வீடு திரும்பியுள்ளார். இதனால் அவரது மகன் பல லட்சம் ரூபாய் கட்டியும் தந்தையை காப்பாற்ற முடியவில்லையே என்று வேதனை அடைந்தார். கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் வேலுச்சாமி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தந்தைக்கு ஈமச்சடங்கு, காரியம் முடித்துவிட்டு இருந்த வேலுச்சாமியின் மகனுக்கு அந்த தனியார் மருத்துவமனையில் இருந்து தொலைபேசி வந்துள்ளது. அதில் வேலுச்சாமிக்கு சிகிச்சை அளித்ததற்கு பாக்கிக் கட்டணம் 115 ரூபாய் கட்ட வேண்டும் என ஒரு ஊழியர் பேசுகிறார். இதனால் வேதனை அடைந்த அவர் “பல லட்சம் ரூபாய் செலவு செய்தும் தன் தந்தையை இழந்துவிட்டேன். தந்தையை இழந்து துக்கத்தில் இருக்கும் தன்னிடம் 115 ரூபாய்க்காக அழைத்து கேட்கிறீர்களே. இது நியாயமா” என கேட்டுள்ளார். அதற்கு எதிர்தரப்பில் பேசியவர் “நானும் ஒரு தொழிலாளி நிர்வாகம் சொல்வதைத்தான் கேட்கவேண்டும். நீங்கள் பணம் தராவிட்டால் என்னுடைய சம்பளத்தில்தான் பிடிப்பார்கள். என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்” என வினவுகிறார். அதற்கு வேலுச்சாமியின் மகன் “உங்கள் நிர்வாகத்தை என்னிடம் பேசச் சொல்லுங்கள் நான் பணம் தருகிறேன்” என்கிறார். “என்னால் நீங்கள் பாதிக்க வேண்டாம் உங்கள் சொந்த கணக்கில் நான் பணம் செலுத்திவிடுகிறேன். ஆனால் மருத்துவமனைக்கு பணம் கட்ட மாட்டேன்” என்று கூறி போனை கட் செய்கிறார் வேலுச்சாமியின் மகன். கோவை பீளமேடு பி.எஸ்.ஜி. மருத்துவமனை ஊழியர் பேசுவது போல வெளியான இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.