×

மணல் கொள்ளையர்கள் ஏற்படுத்திய பள்ளத்தில் மூழ்கி 11 வயது சிறுவன் பலி

திருப்பத்தூர் வாணியம்பாடியில் பாலாற்றில் மணல் கொள்ளையர்கள் ஏற்படுத்திய ராட்சத பள்ளத்தில் சிக்கி, 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். நிவர் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை பெய்தது. இதனால், வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியில் பாலாற்றில் பாலத்தை கடந்து வெள்ள நீர்ஓடுகிறது. இதனை, அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர். இந்த நிலையில், உதயேந்திரம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் ரித்தீஷ் என்பவர், ஆற்றுநீரில் இறங்கி விளையாடி உள்ளார்.
 

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் பாலாற்றில் மணல் கொள்ளையர்கள் ஏற்படுத்திய ராட்சத பள்ளத்தில் சிக்கி, 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். நிவர் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை பெய்தது. இதனால், வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியில் பாலாற்றில் பாலத்தை கடந்து வெள்ள நீர்ஓடுகிறது. இதனை, அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர். இந்த நிலையில், உதயேந்திரம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் ரித்தீஷ் என்பவர், ஆற்றுநீரில் இறங்கி விளையாடி உள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அப்பகுதியில் மணல் கொள்ளையர்கள் ஏற்படுத்திய ராட்சத பள்ளத்தில் மூழ்கினார்.

இதனை கண்டு அருகாமையில் இருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.