×

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு: அதிர்ச்சியில் பக்தர்கள்!

மானாமதுரையில் 100 ஆண்டுகள் பழமையான கோவிலிலிருந்து ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை : மானாமதுரையில் 100 ஆண்டுகள் பழமையான கோவிலிலிருந்து ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் கிராமத்தில் கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 100 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை கோயிலை திறக்க வந்த அர்ச்சகர் ஸ்ரீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். காரணம் கோயிலின் முன்பக்க
 

மானாமதுரையில் 100 ஆண்டுகள் பழமையான கோவிலிலிருந்து  ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை : மானாமதுரையில் 100 ஆண்டுகள் பழமையான கோவிலிலிருந்து  ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் கிராமத்தில் கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 100 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். 

இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை கோயிலை  திறக்க வந்த அர்ச்சகர்  ஸ்ரீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். காரணம் கோயிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. கோவிலிருந்த  50 கிலோ எடையுள்ள உற்சவ சிலையான கரியமாணிக்க பெருமாள் சிலை மற்றும் 20 கிலோ எடையுள்ள ஸ்ரீ தேவி, பூதேவி ஆகிய மூன்று  ஐம்பொன் சிலைகளும் திருடு போயிருந்தது. மேலும் ஸ்ரீதேவி – பூதேவி கழுத்திலிருந்த மூன்று பவுன் தங்க சங்கிலியும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு 4 லட்சமாகும். 

இதையடுத்து ஐம்பொன் சிலைகள் திருட்டு குறித்து அர்ச்சகர் ஸ்ரீனிவாசன் மானாமதுரை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இக்கொள்ளைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலிருந்து சிலை திருடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.