×

பெண் குழந்தைகளை தத்தெடுத்து வன்கொடுமை - குழந்தை மையத்தில் பல குழந்தைகள் மீட்பு  

 


பல அனாதை குழந்தைகளை வளர்ப்பதாக கூறி பலருக்கு தத்து கொடுத்து பணம் ஈட்டிய ஒரு குழந்தைகள் மையத்திலிருந்து 20 குழந்தைகளை போலீஸ் மீட்டது 


மேற்கு வங்க மாநிலம் சல்கியாவில் ஒரு குழந்தை தத்தெடுப்பு மையத்தில் , குழந்தைகள்  கடத்தல் மோசடி நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது .இந்த தகவலை,அந்த மையத்திலிருந்து தத்து கொடுக்கப்பட்ட ஒரு சிறுமி ,அந்த வீட்டின் வளர்ப்பு பெற்றோறால்  தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக   புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 
 இந்த குடும்பம் அந்த தொட்டில் குழந்தை மையத்தில் இருந்து இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை தத்தெடுத்தது.

அந்த சிறுமியின் புகாரின் அடிப்படையில், ஹவுரா நகர போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு 'தொட்டில் குழந்தை மையத்தில்' சோதனை நடத்தினர் .அப்போது அந்த ரெய்டில்  ஒரு பெண் மற்றும் மேற்கு வங்க சிவில் சர்வீஸ் (WBCS) அதிகாரி உட்பட 10 நபர்களை போலீசார் கைது செய்தனர். இதன் விளைவாக, கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்தப் பெண் நடத்தி வந்த அந்த மையத்திலிருந்து இருந்து  20 குழந்தைகளை ஹவுரா போலீசார் மீட்டனர்.இந்த ரெய்டில்  9 பேரை கொல்கத்தா போலீஸார் கைது செய்தனர்