×

“பொன்னியின் செல்வன்” படத்தில் நந்தினியாக வில்லத்தனம் செய்யும் த்ரிஷா | பூங்குழலி யார்?      

காலங்கள் கடந்தும் வாசகர்களின் மனதில் சிம்ம சொப்பனமாக வீற்றிருக்கும் வெகு சில கதைகளில் எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தனி இடம் பிடித்திருக்கிறது. எம்.ஜி.ஆர் காலத்தில் ‘பொன்னியின் செல்வன்’ கதையை திரைப்படமாக எடுப்பதற்காக இயக்குநர் மகேந்திரனை வைத்து திரைக்கதை எல்லாம் எழுதி முயற்சித்தார். பின்னர் அவரது கனவு கைக்கூட வில்லை. அதன்பின் உலக நாயகன், ஆஸ்கார் நாயகன், ஆழ்வார்பேட்டை ஆண்டவர் கமல் ‘பொன்னியின் செல்வன்’ கதையைத் திரைப்படமாக இயக்குவதற்கு முயற்சித்தார். பின்னர் அவரது ஆஸ்கார் கனவைப் போலவே
 

காலங்கள் கடந்தும் வாசகர்களின் மனதில் சிம்ம சொப்பனமாக வீற்றிருக்கும் வெகு சில கதைகளில் எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தனி இடம் பிடித்திருக்கிறது. எம்.ஜி.ஆர் காலத்தில் ‘பொன்னியின் செல்வன்’ கதையை திரைப்படமாக எடுப்பதற்காக இயக்குநர் மகேந்திரனை வைத்து திரைக்கதை எல்லாம் எழுதி முயற்சித்தார். பின்னர் அவரது கனவு கைக்கூட வில்லை. அதன்பின் உலக நாயகன், ஆஸ்கார் நாயகன், ஆழ்வார்பேட்டை ஆண்டவர் கமல் ‘பொன்னியின் செல்வன்’ கதையைத் திரைப்படமாக இயக்குவதற்கு முயற்சித்தார். பின்னர் அவரது ஆஸ்கார் கனவைப் போலவே பொன்னியின் செல்வன் கனவும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. 

இந்நிலையில், பல இயக்குநர்கள் முயற்சித்து ஒதுங்கிக் கொள்ள, இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க உள்ளார். கடந்த காலங்களில் அவரும் பலமுறை முயற்சி செய்து அதில் தோல்வியடைந்துள்ளார். ஆனால் இந்த முறை தனது கனவுப்படமான பொன்னியின் செல்வனை எடுத்தே தீருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 பாகங்களை கொண்ட அந்நாவலை 3 மணி நேரத்திற்குள் எடுப்பதென்பது நிச்சயம் சவாலான காரியம் தான்.

ஏற்கனவே இந்த படத்தில் அமிதாப்பச்சன், ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, அமலாபால், ஜெயராம் என இந்திய திரையுலகத்தை சேர்ந்த நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு  நடிக்க உள்ளனர். இதில் நந்தினி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது நடிகை த்ரிஷா நந்தினி கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நயன்தாரா பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வில்லத்தனம் செய்ய தேர்வாகியிருக்கிறார் த்ரிஷா!