×

’தமிழக காவல்துறையைக் கண்டிக்கிறேன்’… குருநாதருக்கு வக்காலத்து வாங்கும் இயக்குநர் மாரி செல்வராஜ்…

ஒரு மன்னரை அத்தனை சாதி பெருமிதம் கொண்டவர்களும் கொண்டாடுகிறார்கள் என்றால் அவரை நோக்கி ஆவேசமாக எறியப்படும் கற்களில் நம்முடைய கல்லும் ஒரு கல்லாக இருந்தாக வேண்டும். வலைதளப்பக்கங்களில் இன்றைக்கு ஓபிஎஸ், இபிஎஸ், ஒற்றைத்தலைமைப் பஞ்சாயத்துகளுக்கு இணையாக ஓடிக்கொண்டிருப்பது பா.ரஞ்சித்தின் ராஜராஜ சோழன் குறித்த கமெண்டும், அதை எதிர்த்து எட்டுப்பட்டி ஜனங்களும் நடத்தும் எதிர்த் தாக்குதலும். இந்த விவகாரத்தில் தனக்கு முதல் படம் கொடுத்த தயாரிப்பாளரும், தனது மானசீக குருநாதருமான பா.ரஞ்சித்துக்கு ஆதரவாக ராஜராஜ சோழனை நோக்கி தன்
 

ஒரு மன்னரை அத்தனை சாதி பெருமிதம் கொண்டவர்களும் கொண்டாடுகிறார்கள் என்றால் அவரை நோக்கி ஆவேசமாக எறியப்படும் கற்களில் நம்முடைய கல்லும் ஒரு கல்லாக இருந்தாக வேண்டும்.

வலைதளப்பக்கங்களில் இன்றைக்கு ஓபிஎஸ், இபிஎஸ், ஒற்றைத்தலைமைப் பஞ்சாயத்துகளுக்கு இணையாக ஓடிக்கொண்டிருப்பது பா.ரஞ்சித்தின் ராஜராஜ சோழன் குறித்த கமெண்டும், அதை எதிர்த்து எட்டுப்பட்டி ஜனங்களும் நடத்தும் எதிர்த் தாக்குதலும். இந்த விவகாரத்தில் தனக்கு முதல் படம் கொடுத்த தயாரிப்பாளரும், தனது மானசீக குருநாதருமான பா.ரஞ்சித்துக்கு ஆதரவாக ராஜராஜ சோழனை நோக்கி தன் பங்குக்கு ஒரு கல்லை எறிந்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

சற்றுமுன்னர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்ட மாரி செல்வராஜ்,…ஒரு மன்னரை அத்தனை சாதி பெருமிதம் கொண்டவர்களும் கொண்டாடுகிறார்கள் என்றால் அவரை நோக்கி ஆவேசமாக எறியப்படும் கற்களில் நம்முடைய கல்லும் ஒரு கல்லாக இருந்தாக வேண்டும். அவர் எந்த கோபுரத்தின் உச்சியியிலும் இருக்கட்டும். எவ்வளவு வெளிச்சமான ஒளியையும் கொடுக்கட்டும். வரலாற்றின் இருட்டுக்குள் நிறுத்தப்பட்டவர்கள் எறியும் கற்களுக்கு எப்போதும் பதில் சொல்லிதான் ஆக வேண்டும். 

வரலாற்றில் தொடர்ந்து மறுக்கபடும் சமூக நீதியின் அடிப்படையில் தன் கருத்துக்களின் வழி கேள்விகளை எழுப்பிய இயக்குநர் பா. இரஞ்சித் அவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்த தமிழக காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறேன்’ என்று தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

ஓயாமல் பா.ரஞ்சித்தை நோக்கியே கல் வீசி டயர்டானவர்கள் இனி தங்கள் கவனத்தை மாரி செல்வராஜ் பக்கமும் கொஞ்சம் திருப்பலாம்.