×

’இந்தியன் 2’விலிருந்து ‘முதல்வன் 2’வுக்கு ஷிஃப்ட் ஆகிறாரா டைரக்டர் ஷங்கர்?

போதும்பா நிப்பாட்டு என்று சொல்லுமளவுக்கு இந்தியன் 2’ குறித்த செய்திகள் நாளொன்றும் பொழுதொன்றுமாக வந்துகொண்டிருக்கும் நிலையில், விஜய்யின் தளபதி 65’படத்தை ஷங்கர்தான் இயக்கப்போகிறார் என்று புதிதாக இன்னொரு குரூப் கிளம்பியிருக்கிறார்கள். ‘பிகில்’ பட ஷூட்டிங் கிளமேக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னும் சில தினங்களில் மும்பைக்கு பறக்கவிருக்கிறார் நடிகர் விஜய். பிகில் படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியில் நடிகர் ஷாருக் கான் ஆடவிருக்கிறார் என்னும் செய்தியை இந்த மும்பை ஷிஃப்டிங் உறுதிப்படுத்தும் நிலையில்,இந்தப் படத்தை முடித்த கையோடு
 

போதும்பா நிப்பாட்டு என்று சொல்லுமளவுக்கு இந்தியன் 2’ குறித்த செய்திகள் நாளொன்றும் பொழுதொன்றுமாக வந்துகொண்டிருக்கும் நிலையில், விஜய்யின் தளபதி 65’படத்தை ஷங்கர்தான் இயக்கப்போகிறார் என்று புதிதாக இன்னொரு குரூப் கிளம்பியிருக்கிறார்கள்.

‘பிகில்’ பட ஷூட்டிங் கிளமேக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னும் சில தினங்களில் மும்பைக்கு பறக்கவிருக்கிறார் நடிகர் விஜய். பிகில் படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியில் நடிகர் ஷாருக் கான் ஆடவிருக்கிறார் என்னும் செய்தியை இந்த மும்பை ஷிஃப்டிங் உறுதிப்படுத்தும் நிலையில்,இந்தப் படத்தை முடித்த கையோடு ‘மாநகரம்’, ‘கைதி’ ஆகியப் படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்தில் நடிக்கிறார் விஜய்.

இதற்கு அடுத்த தளபதி 65’தான் ஷங்கர் விஜய் இணையும் புள்ளி என்று புதுசாகக் கோலம்போட ஆரம்பித்திருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். ‘இந்தியன் 2’படம் நடந்தால் அதை முடித்துவிட்டு, இல்லையேல் நேரடியாக தளபதி 65’ படத்துக்கு நடையைக்கட்டு இதுதான் இப்போதைக்கு ஷங்கரின் முடிவாம். அப்படி விஜயோடு ஷங்கர் கூட்டணி அமைக்கும்பட்சத்தில் அது நிச்சயமாக ‘முதல்வன் 2’ படமாகத்தான் இருக்கும் என்றும் முதல்’வனில் வில்லனாக நடித்த ரகுவரன் கேரக்டரில் இம்முறை அர்ஜூன் நடிக்கக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.