×

‘ஹைதராபாத்தை பாதுகாப்பான நகரம் என்று நினைத்தேன்’: பிரியங்கா ரெட்டி கொலை குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் வேதனை!

நேற்றுமாலை பணிமுடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த நிலையில் அவரின் இருசக்கர வாகனம் பஞ்சராகியுள்ளது. ஹைதராபாத் ஷாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா ரெட்டி. இவர் கொல்லப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். தினமும் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுவந்த பிரியங்கா, நேற்றுமாலை பணிமுடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த நிலையில் அவரின் இருசக்கர வாகனம் பஞ்சராகியுள்ளது. இதையடுத்து செய்வதறியாது திகைத்து போன அப்பெண்ணை மர்மநபர்கள் சிலர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றுள்ளனர்.
 

நேற்றுமாலை பணிமுடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த நிலையில் அவரின் இருசக்கர வாகனம் பஞ்சராகியுள்ளது.

ஹைதராபாத் ஷாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா ரெட்டி. இவர்  கொல்லப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கால்நடை மருத்துவராக  பணிபுரிந்து வருகிறார்.  தினமும் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுவந்த பிரியங்கா,  நேற்றுமாலை பணிமுடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த நிலையில் அவரின் இருசக்கர வாகனம் பஞ்சராகியுள்ளது. இதையடுத்து செய்வதறியாது திகைத்து போன அப்பெண்ணை மர்மநபர்கள் சிலர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றுள்ளனர். 

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.   #RIPPriyankaReddy, #JusticeForPriyankaReddy ஆகிய ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில்  டிரெண்டாகி வருகிறது. மேலும், பிரியங்கா ரெட்டி மரணத்துக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களுடைய இரங்கலையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த  சம்பவம் குறித்து  நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், டாக்டர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார் என்ற செய்தியறிந்து  என் மனம் நொறுங்கிவிட்டது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. பேச வார்த்தைகள் வரவில்லை. யார் மீது பழி சொல்வது என்பதும் தெரியவில்லை. ஹைதராபாத்தை நான் மிக மிக பாதுகாப்பான நகரம் என்று நினைத்திருந்தேன். ஆனால்  அங்குதான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நம் தேசம் எப்போது  பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக அமையும் என்பது தெரியவில்லை. அந்த கொடூர மனம் படைத்த குற்றவாளிகள் உடனே கைது செய்யப்படவேண்டும். அந்த குடும்பத்திற்கு என் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவர்களுக்கு கடவுள்  சக்தியை கொடுக்க வேண்டும்.  நான் கர்மாவின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.