×

‘ஷிகாரா’ படத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீரைக் கட்டுப் படுத்திக் கொண்ட அத்வானி : வைரல் வீடியோ!

இயக்குநர் வினோத் சோப்ரா தயாரிப்பில் உருவாகி, நேற்று திரையரங்குகளில் வெளியான படம் ஷிகாரா, தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் காஷ்மீர். இயக்குநர் வினோத் சோப்ரா தயாரிப்பில் உருவாகி, நேற்று திரையரங்குகளில் வெளியான படம் ஷிகாரா, தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் காஷ்மீர். ஹிந்தியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் 1990 ஆம் ஆண்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீர் பண்டிதர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதில், சிவ்குமார் தார் மற்றும் அவரது மனைவி சாந்தி
 

இயக்குநர் வினோத் சோப்ரா தயாரிப்பில் உருவாகி, நேற்று திரையரங்குகளில் வெளியான படம் ஷிகாரா, தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் காஷ்மீர்.

இயக்குநர் வினோத் சோப்ரா தயாரிப்பில் உருவாகி, நேற்று திரையரங்குகளில் வெளியான படம் ஷிகாரா, தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் காஷ்மீர். ஹிந்தியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் 1990 ஆம் ஆண்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீர் பண்டிதர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதில், சிவ்குமார் தார் மற்றும் அவரது மனைவி சாந்தி உள்ளிட்ட கற்பனைக் கதையின் மூலம் காஷ்மீர் பண்டிதர்களின் வெளியேற்றத்தை இந்த படம் விவரிக்கிறது. 

இயக்குநர்  வினோத் சோப்ரா இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ ஏக்லவ்யா: தி ராயல் கார்ட்” திரைப்படத்திற்குப் பிறகு, அவருக்கு மிக நெருக்கமான படமாக ஷிகாரா படம் அமைந்துள்ளது. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இன்று இந்த படத்தைப் பார்க்கப் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி சென்றிருந்தார். அந்த படத்தின் கிளைமேக்ஸின் போது அத்வானி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீரை கட்டுப் படுத்திக் கொண்டார். அதனைக் கண்ட  வினோத் சோப்ரா, அத்வானியின் அருகில் சென்று மண்டியிட்டு அவரை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். படத்தைப் பார்த்து அத்வானி உணர்ச்சிவசப்பட்ட அந்த வீடியோ இணைய தளத்தில் வைரல் ஆகி வருகிறது.