×

‘ரஜினியின் கன்னத்தைக் கிள்ளி திருஷ்டி கழிச்சேன்’ – மரண மாஸ் வைரல் ஸ்டார் மஞ்சு பெருமிதம்!

‘மரண மாஸ்’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலமான மஞ்சு க்ளவுடி, பேட்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சுவாரஸ்ய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். சென்னை: ‘மரண மாஸ்’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலமான மஞ்சு க்ளவுடி, பேட்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சுவாரஸ்ய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். ‘டிக்டாக்’ ஆப் மூலம் பேட்ட திரைப்படத்தின் சமீபத்திய வைரலாக பார்க்கப்படும் மரண மாஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலம் ஆனவர், மஞ்சு
 

‘மரண மாஸ்’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலமான மஞ்சு க்ளவுடி, பேட்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சுவாரஸ்ய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

சென்னை: ‘மரண மாஸ்’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலமான மஞ்சு க்ளவுடி, பேட்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சுவாரஸ்ய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

‘டிக்டாக்’ ஆப் மூலம் பேட்ட திரைப்படத்தின் சமீபத்திய வைரலாக பார்க்கப்படும் மரண மாஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலம் ஆனவர், மஞ்சு க்ளவுடி.

மரண மாஸ் பாடலுக்கு இவர் போட்ட குத்தாட்டம் பெரும் வைரலாகியதை தொடர்ந்து, பேட்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு சன் நிறுவனத்தில் இருந்து மஞ்சுவிற்கு அழைப்பு சென்றுள்ளது. அதனை ஏற்று இசை வெளியீட்டு விழாவிற்கு சென்ற மஞ்சு க்ளவுடி, அவரது கணவருடன் சேர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு சிறப்பு பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளனர்.

allowfullscreen

இதுகுறித்து மஞ்சு க்ளவுடி கூறுகையில், “நான் தலைவரோட ரசிகை இல்ல, பக்தை! சின்ன வயசுல இருந்தே அவரை ஒருமுறையாவது நேர்ல பார்த்துடணும்னு பயங்கர ஆசை. ‘பேட்ட’ சிங்கிள் வெளியானதும் சிலர் ‘இவ்ளோ வேகமான பீட்டுக்குத் தலைவர் எப்படி டான்ஸ் ஆடப்போறாரோ’னு கலாய்ச்சாங்க. எனக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு. அந்த வெறியிலதான் அப்படி டான்ஸ் ஆடுனேன். ஆடி முடிச்சுட்டு டயர்டாகி தூங்கிட்டேன். காலையில எழுந்து பார்த்தால் நான் நினைச்சுப் பார்க்காத அளவுக்கு ரீச். சன் டிவி, அனிருத் எல்லோரும் ரீட்வீட் பண்ணியிருந்தாங்க.

அப்புறம், சன் டிவியில் இருந்து கூப்ட்டு ‘பேட்ட’ ஆடியோ லான்ச்சுக்கு நீங்க வரணும்னு சொன்னாங்க. எனக்கு தலைகால் புரியல. அங்கே போனா, தலைவருக்கு அடுத்த வரிசையில் என்ன உட்கார வெச்சாங்க. இதுவே போதும் என் பிறவிப்பலனை அடைஞ்சுட்டேன்னு நினைச்சேன். பிறகு, தலைவரைப் பார்த்து கிஃப்ட் கொடுத்தேன். எனக்கு என்ன நடந்து இருக்குன்னே புரியல. அவரை கன்னத்தைக் கிள்ளி திருஷ்டி கழிச்சேன். அவர் என்னை குழந்தையை பார்க்குற மாதிரி பார்த்துட்டு இருந்தாரு. என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தருணம் அது” என பக்தைக்கே உரிய உணர்ச்சி மொழியில் விவரிக்கிறார், மஞ்சு.