×

‘பொண்டாட்டி செத்தா, அந்தப் புருஷன் புது மாப்பிள்ளை’ : விஷ்ணு விஷால் – ஜுவாலா முத்த புகைப்படங்களை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

தற்போது இவர் இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா குட்டாவுடன் நெருக்கமாக இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துத்திருந்தாலும் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்குநர்
 

தற்போது இவர்   இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார். 

நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா குட்டாவுடன் நெருக்கமாக இருக்கும்  புதிய புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில்  வேகமாகப் பரவி வருகிறது. 

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்  நடிகர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துத்திருந்தாலும் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர்   இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார். 

இதனிடையே இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது  தோழி ரஜினியை  திருமணம்  கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஒரு மகன் இருக்கிறான். இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ஒரு வருடத்திற்குப் பிறகு விவாகரத்து கிடைத்துவிட்டதாக விஷ்ணு விஷால்  அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

இதையடுத்து விஷ்ணு விஷால்  பிரபல  பேட்மிண்டன்  வீராங்கனை  ஜூவாலா  குட்டாவுடன் நெருக்கமாக உள்ள செல்பி புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இதனால் விஷ்ணுவிஷால் ஜுவாலாவை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகத் தகவல்  வெளியானது. இதுகுறித்து கருத்து தெரிவித்த விஷ்ணு விஷால், நாங்கள் நீண்ட கால நன்பர்கள் .  இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும். இதற்குமேல் இப்போது எதுவும் கூற முடியாது. இருவருக்கும் நிறைய பொறுப்புகள் உள்ளன” என்றார்.

இந்நிலையில் விஷ்ணு விஷால் ஜூவாலாவுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாடியுள்ளார். அப்போது இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை  அவரவர் தங்களது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். 

இதை கண்ட நெட்டிசன்கள், அடுத்தவம் புருஷன ஆட்டைய போடுறதுல என்ன ஒரு சந்தோஷம்..இதுக்கு இப்படி ஒரு கேவலமான விளம்பரம் வேறு.. த்தூ என்றும் பொண்டாட்டி செத்தா! அந்தப் புருஷன் புது மாப்பிள்ளை!!!  சொல்லுங்க…ஊரில் ….. இது பழமொழி!!! என்றும் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.