×

‘தலைவி’ படத்துக்கு எதிராக ஜெ. தீபா வழக்கு!

திரைக்கதைகள் ஜெயலலிதாவின் கண்ணியத்திற்குக் குறையில்லாமல் உள்ளதா என்று சரிபார்க்கப்பட வேண்டும் சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மனு தாக்கல் செய்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ஏ.எல். விஜய் நடிகை கங்கனா ரனாவத்தை வைத்து தலைவி என்ற பெயரில் படம் இயக்கி வருகிறார். அதே போல்
 

திரைக்கதைகள் ஜெயலலிதாவின் கண்ணியத்திற்குக் குறையில்லாமல் உள்ளதா என்று சரிபார்க்கப்பட வேண்டும்

சென்னை: முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாறு  குறித்த படங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மனு தாக்கல் செய்துள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாறை திரைப்படமாக எடுக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர்  ஏ.எல். விஜய் நடிகை கங்கனா ரனாவத்தை  வைத்து தலைவி என்ற பெயரில் படம் இயக்கி வருகிறார். அதே போல் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாற்றை தற்போது வெப் சீரிஸாக இயக்கவுள்ளார்.  இந்த வெப் சீரிஸுக்கு ‘குயின்’ என்று  என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  எம்எக்ஸ் பிளேயரில் ஒளிபரப்பப்பட்ட இந்த வெப் சீரிஸில்  ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.மேலும் இந்த சீரிஸில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இந்தப் படங்கள் வெளியிடுவதற்கு முன்பு தன்னிடம் அனுமதி பெற வேண்டும் என  உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.  அதில், தலைவி படம் மற்றும் குயின் இணையதள தொடர் ஆகிய இந்த இரண்டிற்கும் தடைவிதிக்க வேண்டும். மேலும் இதன் திரைக்கதைகள் ஜெயலலிதாவின் கண்ணியத்திற்குக் குறையில்லாமல் உள்ளதா என்று சரிபார்க்கப்பட வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக இதுகுறித்து கருத்து கூறிய  ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்,  ‘ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாறு படத்தை எடுக்க ஏற்கனவே என்னிடம் இயக்குநர்  ஏ.எல். விஜய் அனுமதி பெற்றுவிட்டார். வாழ்க்கை  வரலாற்றை உள்ளது உள்ளபடி எடுப்பேன் என்றும் திரித்துக் கூறமாட்டேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்’ என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.