×

‘உங்கள் உடல் உறுப்புகள் மீது கொள்ளை ஆசை’ – டாப்சியிடம் வாயைவிட்டு அசிங்கப்பட்ட ரசிகர்!

பிரபல நடிகை டாப்ஸியின் உடல் உறுப்புகள் மீது கொள்ளை ஆசை என தூது அனுப்பிய ரசிகருக்கு அவர் ‘கூலாக’ பதிலடி கொடுத்துள்ளார். சென்னை: பிரபல நடிகை டாப்ஸியின் உடல் உறுப்புகள் மீது கொள்ளை ஆசை என தூது அனுப்பிய ரசிகருக்கு அவர் ‘கூலாக’ பதிலடி கொடுத்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அதன்பின் ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட ஒரு சில வெற்றிப் படங்களில் நடித்தார். இவர்
 

பிரபல நடிகை டாப்ஸியின் உடல் உறுப்புகள் மீது கொள்ளை ஆசை என தூது அனுப்பிய ரசிகருக்கு அவர் ‘கூலாக’ பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை: பிரபல நடிகை டாப்ஸியின் உடல் உறுப்புகள் மீது கொள்ளை ஆசை என தூது அனுப்பிய ரசிகருக்கு அவர் ‘கூலாக’ பதிலடி கொடுத்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அதன்பின் ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட ஒரு சில வெற்றிப் படங்களில் நடித்தார். இவர் கடைசியாக தமிழில் நடித்தப் படம், 2015-ல் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை. அதன் பிறகு தமிழில் நடிக்காமல், தனது முழு கவனத்தையும் இந்தி சினிமாவில் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில், டாப்ஸியின் ட்வட்டர் பக்கத்திற்கு, அவரது ரசிகர் ஒருவர், “உங்களின் உடல் உறுப்புகள் மீது எனக்கு கொள்ளை ஆசை” என தூது அனுப்பியுள்ளார். இதை பார்த்தவுடன், போலீசுக்கு செல்வது, சமூகவலைதளங்களில் பதிவிட்டு விக்டிம் ப்ளே செய்வது, சைபர் கிரைமை நாடுவது போன்ற வழக்கமான செயல்களில் ஈடுபடாமல், “வாவ்! எனக்கும் அவற்றை மிகவும் பிடிக்கும். இதற்கிடையில் உங்களின் ஃபேவரிட் என்ன? எனக்கு எப்போதுமே (செரிப்ரம்) பெருமூளை தான் ஃபேவரிட்” என வித்தியாசமான முறையில் ரசிகரின் மூக்கை உடைத்துள்ளார் டாப்ஸி.

ரசிகரின் மிகவும் கீழ்த்தரமான பதிவை, இத்தனை மெச்சூரிட்டியாக ஹேண்டில் செய்துள்ள டாப்ஸிக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.