×

‘அரசியலுக்கு வாருங்கள்; அரசியல் பேசாமல் எந்த துறையும் வளர்ச்சி பெறாது’ : கமல் ஹாசன் பேச்சு!

கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என மாணவர்கள் நினைத்தனர். அதனால்தான் அரசியலில் கறை படிந்துவிட்டது. சென்னை : நீர் மேலாண்மையை கற்க இஸ்ரேலுக்கு ஏன் செல்ல வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் மாணவர்களின் மத்தியில் உரையாடி வருகிறார். அந்த வகையில் இன்று சென்னை லயோலா கல்லூரியில் மாணவர்களிடம் கமல் உரையாடினார். அப்போது பேசிய அவர், கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்துக்
 

கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என மாணவர்கள் நினைத்தனர். அதனால்தான் அரசியலில் கறை படிந்துவிட்டது.

சென்னை : நீர் மேலாண்மையை கற்க இஸ்ரேலுக்கு ஏன் செல்ல வேண்டும் என்று  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின்  தலைவருமான கமல் ஹாசன்  மாணவர்களின் மத்தியில் உரையாடி வருகிறார்.  அந்த வகையில் இன்று சென்னை லயோலா கல்லூரியில் மாணவர்களிடம் கமல் உரையாடினார். அப்போது பேசிய அவர்,  கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என மாணவர்கள் நினைத்தனர். அதனால்தான் அரசியலில் கறை படிந்துவிட்டது. மாணவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கக் கூடாது. அரசியல் பேசாமல் எந்த துறையும் வளர்ச்சி பெறாது. மாணவர்கள் தேர்தலை புறக்கணிக்காமல் வாக்களிக்க வேண்டும்.பன்முக தன்மையுடன் செயல்பட வேண்டும். நான் எதோ சின்ன பசங்க கிட்ட பேசிட்டு இருக்கறதா சிலர் சொல்லுறாங்க. நான் நாளைய தலைவர்களிடம் பேசுகிறேன்.  இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று சொல்லி விட்டு கடப்பாரையுடன் அண்ணாந்து பார்ப்பவர்கள் நாங்கள் கிடையாது. உங்களுக்கான பாதையை உருவாக்கி வைத்திருப்பவர்கள். நீங்கள் வருவது மட்டும் தான் பாக்கி’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘ நீர் மேலாண்மையைக் கற்க இஸ்ரேலுக்கு ஏன் செல்ல வேண்டும். தமிழர்களே நீர் மேலாண்மையில் சிறந்தவர்களாக விளங்கினர். எந்த மொழிக்கும் நான் எதிரி அல்ல. ஆனால்  மொழியை வைத்து அரசியல் செய்யக் கூடாது. ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போனால் என்ன சாப்பிடுவது என்பதை நாம் தான் தீர்மானிக்கிறோம். அதேபோல் தான் மொழியும்’ என்றார்.