×

ஹீரோவும் நானே வில்லனும் நானே; தலைவர் 167 அப்டேட்

ஏப்ரல் 10-ஆம் தேதி இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஒரு மாதத்திற்கு இந்த படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். ஏப்ரல் 10-ஆம் தேதி இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஒரு மாதத்திற்கு இந்த படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பற்றி அவ்வப்போது அப்டேட்ஸ் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் அதில் பாதி பொய்யாக
 

ஏப்ரல் 10-ஆம் தேதி இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஒரு மாதத்திற்கு இந்த படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். ஏப்ரல் 10-ஆம் தேதி இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஒரு மாதத்திற்கு இந்த படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பற்றி அவ்வப்போது அப்டேட்ஸ் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் அதில் பாதி பொய்யாக இருப்பதுதான் வேதனை.

தலைவர் 167 படத்துக்கு தரமான வில்லன் வேண்டும் என்பதற்காக படக்குழுவினர் எஸ்.ஜே.சூர்யாவை அனுகியிருப்பதாய் தகவல்கள் வெளியானது. இதற்கு படக்குழுவினர் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் நடிக்க ரஜினி, நயன்தாரா தவிர வேறு யாரையும் ஒப்பந்தம் செய்யவில்லை, மற்ற நடிகர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெகுவிரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, ரஜினிக்கு இந்த படத்தில் இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. எந்திரன் படத்துக்கு பிறகு ரஜினி எந்த படத்திலும் வில்லத்தனமாக நடிக்கவில்லை. இந்த படத்தில் ரஜினியையே ஹீரோவாகவும் வில்லனாகவும் காட்ட முடிவு செய்திருக்கிறாராம் இயக்குநர் முருகதாஸ். மீண்டும் ஒரு வில்லன் ரஜினியை பார்க்க ரஜினி ரசிகர்களும் ஆவலாகதான் இருக்கிறார்கள், பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: கைவிடப்பட்ட 1000 கோடி மெகா பட்ஜெட் திரைப்படம்: ரசிகர்கள் அதிர்ச்சி!