×

ஹீரோவாக சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் நடிக்கும் படத்தின் தொடக்கவிழா : ஹீரோயின் யார் தெரியுமா ?

அருள் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் படபிடிப்பு தொடக்க விழா இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது. தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்று பல நாட்களாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது அவரது கடையின் விளம்பர படங்களில் பிரபல நடிகைகளுடன் நடித்து வரும் அவர் விரைவில் வெள்ளித் திரையில் தோன்றுவார் என்றும் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்கள் எடுத்தும் வரும் இயக்குநர்கள்
 

அருள் சரவணன்  கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் படபிடிப்பு தொடக்க விழா இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது.

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்று பல நாட்களாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

தற்போது அவரது கடையின் விளம்பர படங்களில் பிரபல நடிகைகளுடன் நடித்து வரும் அவர் விரைவில் வெள்ளித் திரையில் தோன்றுவார் என்றும் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்  விளம்பரப் படங்கள் எடுத்தும் வரும் இயக்குநர்கள் ஜே.டி மற்றும் ஜெரி இயக்கவுள்ளதாகவும் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைப்பதாகவும் 30 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகவுள்ளதாகவும் விரைவில் இதன் படபிடிப்பு தொடங்கும் என்றும் அறிவிப்புகள் வெளியாயின. 

சரவணன் படம் நடிக்கிறார் என்று தெரிந்த அனைவருக்கும் இருந்த ஒரே கேள்வி, அவருடன் யார் ஜோடியாக நடிக்கிறார் என்பது. பிரபல நடிகைகளான நயன்தாரா, ஹன்சிகா போன்றோருடன் தான் அவர் நடிக்கவுள்ளார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. தற்போது, அவர் யாருடன் நடிக்கிறார் என்பது குறித்து அனைத்து தகவல்களும் வெளிவந்துள்ளன. 

சரவணா ஸ்டோர்ஸ், அருள் சரவணன்  கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் படபிடிப்பு தொடக்க விழா இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது.

இந்த படம் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஜேடி – ஜெர்ரி இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில் சரவணா ஸ்டோர் தயாரிப்பில் உருவாகவுள்ளது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் பிரபு  மற்றும் விவேக் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதில் சரவணனுக்கு ஜோடியாக ஈத்திகதிவாரி நடிக்கிறார். இன்று எளிமையாக நடைப்பெற்ற அந்த பூஜையில் பிரபல இயக்குனர்எஸ்பி முத்துராமன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.