×

ஹாரிசான் ஃபோர்டின் புதிய திரைப்படம், ஆனால் ஹீரோ அவரல்ல!

ஜேக் லண்டன் எழுதிய கால் ஆஃப் தி வைல்ட் இருபதாம் நூற்றாண்டு ஆங்கில இலக்கியத்தில் மிக முக்கியமான நாவல் ஹாரிசான் ஃபோர்டு ஸ்பீல் பெர்க்கின் ஸ்டார் வார்ஸ்சில் துவங்கி இண்டியானா ஜோன்ஸ்,தி ஃபுஜிட்டிவ் போன்ற படங்களில் நடித்த சூப்பர்ஸ்டார்! இண்டியானா ஜோன்சில் ஃபோர்டின் அப்பா வேடத்தில் நடிக்க சீன்கானெரியை அழைத்து வருமளவுக்கு செல்வாக்கு பெற்ற நடிகர்.அவர் இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.ஒன்று இண்டியானா ஜோன்ஸின் 5 ம் பாகம்.அடுத்தது ‘ கால் ஆஃப் தி வைல்ட்’
 

ஜேக் லண்டன் எழுதிய கால் ஆஃப் தி வைல்ட் இருபதாம் நூற்றாண்டு ஆங்கில இலக்கியத்தில் மிக முக்கியமான நாவல்

ஹாரிசான் ஃபோர்டு ஸ்பீல் பெர்க்கின் ஸ்டார் வார்ஸ்சில் துவங்கி இண்டியானா ஜோன்ஸ்,தி ஃபுஜிட்டிவ் போன்ற படங்களில் நடித்த சூப்பர்ஸ்டார்! இண்டியானா ஜோன்சில் ஃபோர்டின் அப்பா வேடத்தில் நடிக்க சீன்கானெரியை அழைத்து வருமளவுக்கு செல்வாக்கு பெற்ற நடிகர்.அவர் இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.ஒன்று இண்டியானா ஜோன்ஸின் 5 ம் பாகம்.அடுத்தது ‘ கால் ஆஃப் தி வைல்ட்’ !

இதில் கால் ஆஃப் தி வைல்ட் 2020 ஃபிப்ரவரியில் திரைக்கு வருகிறது.
ஜேக் லண்டன் எழுதிய கால் ஆஃப் தி வைல்ட் இருபதாம் நூற்றாண்டு ஆங்கில இலக்கியத்தில் மிக முக்கியமான நாவல்.இது பல முறை படமாக்கப்பட்ட கதைதான்.ஆனாலும் ஃபோர்ட் நடிப்பதால் அது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

அதன் முக்கிய காரணங்களில் ஒன்று படத்தின் நாயகன் ஃபோர்ட் அல்ல’ பக்’ என்கிற பெயர் கொண்ட,செய்ண்ட் பெர்னார்ட் இன நாய்தான் படத்தின் 
ஹீரோ!.

அமெரிக்காவின் பெருநகர் ஒன்றில் சொகுசாக வாழ்ந்து கொண்டு இருக்கும் பக் ஹாரிசான் ஃபோர்டுடன் சேர்ந்து அலாஸ்க்காவின் பனிச்சிகரங்களில்,ஆள் நடமாட்டம் இல்லாத காடுகளில்,ஓனாய்களுக்கும் ,பனிக்கட்டிகளுக்கும் இடையில் பல சாகசங்கள் செய்கிறது.ராட்சத சைஸ் நாயாக இருந்தாலும் பக்  , நினைவில் காடுள்ள மிருகம்’ என்று படம் முடிய வரும்போது தெரியும்.