×

ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட ஆர்யா – சயீஷா

ஆர்யா – சயீஷா ஜோடியின் ஹனிமூன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆர்யா – சயீஷா ஜோடியின் ஹனிமூன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழில் வனமகன், கஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சயீஷா சாஹல். இவருக்கும் தமிழின் முன்னனி நடிகரான ஆர்யாவுக்கும் கடந்த வாரம் ஹைதராபாத்தில் திருமணம் நடந்தது. முதன்முதலில் கஜினிகாந்த் திரைப்படத்தில் ஜோடியாக நடித்த ஆர்யா – சயீஷா ஜோடி, தற்போது இயக்குநர் கே.வி.ஆனந்தின் ‘காப்பான்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து
 

ஆர்யா – சயீஷா ஜோடியின் ஹனிமூன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆர்யா – சயீஷா ஜோடியின் ஹனிமூன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழில் வனமகன், கஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சயீஷா சாஹல். இவருக்கும் தமிழின் முன்னனி நடிகரான ஆர்யாவுக்கும் கடந்த வாரம் ஹைதராபாத்தில் திருமணம் நடந்தது.

முதன்முதலில் கஜினிகாந்த் திரைப்படத்தில் ஜோடியாக நடித்த ஆர்யா – சயீஷா ஜோடி, தற்போது இயக்குநர் கே.வி.ஆனந்தின் ‘காப்பான்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அடுத்ததாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இயக்குநர் சக்தி செளந்திரராஜனின் ’டெடி’ படத்திலும் ஜோடியாக நடிக்கிறார்கள். 

இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு தேன்நிலவு கொண்டாடச் சென்றிருக்கின்றனர் புதுமணத் தம்பதியர். தற்போது தேன்நிலவில் இவர்கள் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார் சயீஷா. அதற்கு, ‘சோக்கிங் இன் த சன் வித் மை லவ் எனவும்’ கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்தப் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.