×

ஸ்ரீதேவி மகனை மணக்கும் 42வயது பாலிவுட் நடிகை!

நடிகர் அர்ஜுன் கபூரும், நடிகை மலைக்கா அரோராவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை: நடிகர் அர்ஜுன் கபூரும், நடிகை மலைக்கா அரோராவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வரும் மலைக்கா அரோரா, இயக்குநர் மணிரத்தினத்தின் ‘உயிரே’ படத்தில் இடம்பெற்ற ‘தக்க தைய்ய தைய்யா’ பாடலில் நடனமாடியவர். இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்து
 

நடிகர் அர்ஜுன் கபூரும், நடிகை மலைக்கா அரோராவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை: நடிகர் அர்ஜுன் கபூரும், நடிகை மலைக்கா அரோராவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வரும் மலைக்கா அரோரா, இயக்குநர் மணிரத்தினத்தின் ‘உயிரே’ படத்தில் இடம்பெற்ற ‘தக்க தைய்ய தைய்யா’ பாடலில் நடனமாடியவர். இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற 16 வயதுடைய மகன் இருக்கிறார். இதையடுத்து  கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். விவாகரத்து கேட்டு மும்பை பாந்த்ராவில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அவர்களுக்கு கவுன்சில் வழங்கப்பட்டு, 6 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. தற்போது மகன் அர்ஹான் தந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில்  பாலிவுட் படங்களில் நடித்து வரும் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூருக்கும், நடிகை மலைக்கா அரோராவுக்கும் இடையே காதல் என்று பல காலமாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.   42 வயதான மலைக்காவும் , 33 வயதான  அர்ஜுன் கபூரும் அடிக்கடி ஒன்றாக பல்வேறு விழாக்களுக்குச் செல்வதால் இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகின. 

இதுகுறித்து அவர்களுக்கு நெருக்கமான வட்டாரத்திலோ, ‘அவர்கள் காதலித்து வருவது உண்மைதான். அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.