×

வைரலாகும் ‘2.0’ நாயகியின் நிச்சயதார்த்த புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘2.0’ படத்தில் நாயகியாக நடித்த எமி ஜாக்சனுக்கு அவரது காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் ஆன புகைப்படம் வைரலாகி வருகிறது. சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘2.0’ படத்தில் நாயகியாக நடித்த எமி ஜாக்சனுக்கு அவரது காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் ஆன புகைப்படம் வைரலாகி வருகிறது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘மதராசப்பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை எமி ஜாக்சன், தனுஷ், விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘2.0’ படத்தில் நாயகியாக நடித்த எமி ஜாக்சனுக்கு அவரது காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் ஆன புகைப்படம் வைரலாகி வருகிறது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘2.0’ படத்தில் நாயகியாக நடித்த எமி ஜாக்சனுக்கு அவரது காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் ஆன புகைப்படம் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘மதராசப்பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை எமி ஜாக்சன், தனுஷ், விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமல்லாது பாலிவுட் படங்கள்லும் நடித்த எமி ஜாக்சன், ஹாலிவுட்டின் பிரபல சீரிஸான ‘சூப்பர் கேர்ள்’ தொடரிலும் நடித்து வருகிறார்.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை எமி ஜாக்சன் தற்போது தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இந்திய சினிமாவில் கடந்த ஆண்டு பல நடிகைகள் திருமணம் செய்துக் கொண்டனர். இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே நடிகை எமி ஜாக்சன் தனது திருமணம் தொடர்பான அறிவிப்பைனை வெளியிட்டுள்ளார்.

எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், கையில் வைர மோதிரத்துடன், காதலர் ஜார்ஜ் பனாயிட்டோவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜார்ஜ் பனாயிட்டோ-எமி ஜாக்சன் திருமண நிச்சயதார்த்தம் சாம்பியா நாட்டில் நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது.