×

வெளிவந்த சில நிமிடங்களில் சர்ச்சையில் சிக்கிய மாஸ்டர்!

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு டெல்லி, சென்னையில் நடைபெற்ற நிலையில், மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு கர்நாடகா ஹிமோகாவில் பெரிய சிறைச்சாலை போன்று செட் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர் .

இப்படத்தின் இரண்டு கட்ட  படப்பிடிப்பு டெல்லி, சென்னையில் நடைபெற்ற நிலையில், மூன்றாம்  கட்டப்படப்பிடிப்பு கர்நாடகா ஹிமோகாவில் பெரிய சிறைச்சாலை போன்று செட் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அங்கு விஜய் சேதுபதி மற்றும் விஜய்க்கான காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 5 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர்.  மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் தலைப்பை அறிவித்தாலும் அதற்கு ஆங்கில போஸ்டரை மட்டுமே வெளியிட்டுள்ளனர். பொதுவாக ஒரு படத்தலைப்பை அறிவித்தால் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் முதல் பார்வை வெளியாகும். ஆனால் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்து ஒரு மணிநேரமாகியும் இந்த படத்தின் தமிழ் தலைப்பு வடிவமைப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆளப்போறான் தமிழன், அழகிய தமிழ் மகன் என விஜய்யை பலர் பாராட்டிவரும் நிலையில் படத்தின் பெயர் ஆங்கிலத்தில் மட்டும் வெளியாகியிருப்பது தமிழை புறக்கணிப்பதாக உள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.