×

வெளியானது மோடியின் பயோ பிக்: திரையரங்கத்திற்குப் படையெடுக்கும் பாஜகவினர்!

பிஎம் மோடி திரைப்படம் அனைத்து தடைகளை தாண்டி இன்று வெளியாகியுள்ளது. சென்னை: பிஎம் மோடி திரைப்படம் அனைத்து தடைகளை தாண்டி இன்று வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை பிஎம் மோடி என்ற பெயரில் படமாக ஓமங்க் குமார் இயக்கியுள்ளார். இதில் விவேக் ஓபராய், நரேந்திர மோடியாக நடித்துள்ளார். இவர் தமிழில் அஜீத்தின் விஸ்வாசம் படத்தில் வில்லனாக நடித்தவர். முன்னதாக இப்படம் ஏப்ரல் 11ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்று
 

பிஎம் மோடி திரைப்படம் அனைத்து தடைகளை தாண்டி  இன்று வெளியாகியுள்ளது. 

சென்னை: பிஎம் மோடி திரைப்படம் அனைத்து தடைகளை தாண்டி  இன்று வெளியாகியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை பிஎம் மோடி என்ற பெயரில் படமாக ஓமங்க் குமார் இயக்கியுள்ளார். இதில் விவேக் ஓபராய், நரேந்திர மோடியாக நடித்துள்ளார். இவர் தமிழில் அஜீத்தின் விஸ்வாசம் படத்தில் வில்லனாக நடித்தவர். 

முன்னதாக இப்படம் ஏப்ரல் 11ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்று வந்ததால் திரைப்படத்தை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்தது. தேர்தல் சமயத்தில் மின்னணு ஊடகங்களில் எந்த கட்சியோ அல்லது தனிநபருக்கோ ஆதாயம் அளிக்கும் வகையிலான எதையும் ஒளிபரப்பாகக்கூடாது என்ற அடிப்படையில் இந்த படத்தை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்தது. 

இதையடுத்து தேர்தல் முடிவுக்கு பின் 24 ஆம் தேதி(இன்று) படத்தை வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருந்தது. அதன்படி அனைத்து தடைகளைத் தாண்டி பிஎம் மோடி திரைப்படம் இன்று இந்தியா முழுவதும் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் மக்களவை தேர்தலில் மோடி வெற்றிபெற்றதால் மக்கள் ஆர்வத்துடன் கண்டு படத்தை பார்த்து வருகின்றனர்.