×

விஸ்வாசம் படம் பார்த்து தேம்பி அழுத சிறுமி! வைரலாகும் வீடியோ!!

விஸ்வாசம் படம் பார்த்து சிறுமி ஒருவர் தேம்பி அழும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகிவருகின்றனர் சென்னை: விஸ்வாசம் படம் பார்த்து சிறுமி ஒருவர் தேம்பி அழும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகிவருகின்றனர். சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் கடந்த 10-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தல ரசிகர்கள், அவருக்கு பேனர்கள் வைத்து அமர்க்களப்படுத்தி வந்தனர்.தல ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் திரைப்படம் ரசிக்க வைப்பதாகக் கூறப்படுகிறது.
 

விஸ்வாசம் படம் பார்த்து சிறுமி ஒருவர் தேம்பி அழும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகிவருகின்றனர்

சென்னை: விஸ்வாசம் படம் பார்த்து சிறுமி ஒருவர் தேம்பி அழும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகிவருகின்றனர்.

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் கடந்த 10-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தல ரசிகர்கள், அவருக்கு பேனர்கள் வைத்து அமர்க்களப்படுத்தி வந்தனர்.தல ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் திரைப்படம் ரசிக்க வைப்பதாகக் கூறப்படுகிறது.

குடும்ப படமான ‘விஸ்வாசம்’திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளம் உள்ளது. பார்வையாளர்களை கண் கலங்க வைக்கும் செண்டிமெண்ட் காட்சி அமைந்துதிருப்பதால் குடும்பமாக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், இத்திரைப்படத்தை பார்க்கும் போதே சிறுமி ஒருவர் தேம்பி தேம்பி அழும் வீடியோ காட்சியை அப்படத்தை தயாரித்த சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை செண்டிமெண்டல்லால்  கட்டி போட்ட இத்திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் கழிந்தும் இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு வருகிறது. 

மேலும் இத்திரைப்படம் 125கோடி வசூல் செய்துள்ளதாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது