×

விஸ்வாசம் படத்துக்கு அஜித் ரசிகர்கள் மாஸ் பேனர்!

விஸ்வாசம் படத்திற்காக தல ரசிகர்கள் மாஸ்ஸாக சென்னையில் உள்ள பிரபல திரையரங்கத்தில் பேனர் வைத்துள்ளனர் சென்னை: விஸ்வாசம் படத்திற்காக தல ரசிகர்கள் மாஸ்ஸாக சென்னையில் உள்ள பிரபல திரையரங்கத்தில் பேனர் வைத்துள்ளனர். வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ வரிசையில் 4வது முறையாக இயக்குநர் சிவா-அஜித் கூட்டணியில் உருவாகியுள்ளது ‘விஸ்வாசம்’ திரைப்படம். இதில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. இப்படத்தை ஜன.10ம்
 

விஸ்வாசம் படத்திற்காக தல ரசிகர்கள் மாஸ்ஸாக சென்னையில் உள்ள பிரபல திரையரங்கத்தில் பேனர் வைத்துள்ளனர்

சென்னை: விஸ்வாசம் படத்திற்காக தல ரசிகர்கள் மாஸ்ஸாக சென்னையில் உள்ள பிரபல திரையரங்கத்தில் பேனர் வைத்துள்ளனர்.

வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ வரிசையில் 4வது முறையாக இயக்குநர் சிவா-அஜித் கூட்டணியில் உருவாகியுள்ளது ‘விஸ்வாசம்’ திரைப்படம். இதில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

இப்படத்தை ஜன.10ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு, படத்தின் புக்கிங் ஓபன் செய்து சூடு பிடித்துள்ள நிலையில், திரையரங்குகளின் முன் ‘தல’ மீதான தங்களின் விஸ்வாசத்தை காட்ட, அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைனில் விஸ்வாசம் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. ரஷ்யாவில் அஜித் படம் வெளியாவது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில், விஸ்வாசம் ரிலீஸ் ஆக  ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் தல ரசிகர்கள் பட்டித்தொட்டி எங்கும் பேனர் வைத்து பட்டயைகிளப்பி வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள பிரபல ரோகினி  திரையரங்கத்தில் அஜித் உருவத்தை முற்றிலும் வாட்டர் பாட்டில்களால் செய்யப்பட்ட பேனர் வைத்து தல ரசிகர்கள் மாஸ் காட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி 185 அடி கட்-அவுட், 108 அடி போஸ்டர் என தல ரசிகர்கள் இந்த முறை வேற லெவல் கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளனர்.