×

விஸ்வாசம் படக்குழுவினர் முன்னிலையில் அஜித் சொன்னது இது தானாம்: இயக்குநர் சிவா நெகிழ்ச்சி!

வீரம், வேதாளம், விவேகம் படங்களை விட விஸ்வாசம் படம் தான் சிறப்பானது என்று அஜித் தன்னிடம் கூறினார் என்று இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார் சென்னை: வீரம், வேதாளம், விவேகம் படங்களை விட விஸ்வாசம் படம் தான் சிறப்பானது என்று அஜித் தன்னிடம் கூறினார் என்று இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ வரிசையில் 4வது முறையாக இயக்குநர் சிவா-அஜித் கூட்டணியில் உருவாகியுள்ளது ‘விஸ்வாசம்’ திரைப்படம். இதில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.
 

வீரம், வேதாளம், விவேகம் படங்களை விட விஸ்வாசம் படம் தான் சிறப்பானது என்று அஜித் தன்னிடம் கூறினார் என்று இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார் 

சென்னை: வீரம், வேதாளம், விவேகம் படங்களை விட விஸ்வாசம் படம் தான் சிறப்பானது என்று அஜித் தன்னிடம் கூறினார் என்று இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார் 

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ வரிசையில் 4வது முறையாக இயக்குநர் சிவா-அஜித் கூட்டணியில் உருவாகியுள்ளது ‘விஸ்வாசம்’ திரைப்படம். இதில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும்  ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வருகிறது

இந்நிலையில் இப்படம் குறித்து இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த இயக்குநர் சிவா,  ‘வீரம் படத்தின்போதே நாம் நிறைய படங்கள் இணைந்து செய்யலாம் என்று நடிகர் அஜித் சொன்னார். அவர் சொன்னது போலவே வரிசையாக 4 படங்கள் அவருடன் பணியாற்றிவிட்டேன். விஸ்வாசம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படமாக இருக்கும். விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு நாம் இணைந்து பணியாற்றிய  சிறப்பான படம் இது தான் என்று படக்குழு முன்னிலையில் அஜித் என்னிடம் கூறினார். அஜித் போல ஒரு பெரிய நடிகரிடம் இருந்து இப்படி ஒரு வாழ்த்து வருவது ஆரோக்கியமான ஒன்று. ரசிகர்கள் எதிர்பார்த்து வருவதை விட படம் சிறப்பாக இருக்கும்’ என்றார்.

விஸ்வாசம் திரைப்படத்தின் ரிலீசையொட்டி  வானுயர் கட்-அவுட்கள், பிரம்மாண்ட போஸ்டர்கள் எனத் தல ரசிகர்கள் விஸ்வாசம் திருவிழாவிற்கு ஆயத்தமாகி உள்ளனர்.