×

விருதுகளை குவிக்கும் பரியேறும்: உற்சாகத்தில் மாரி செல்வராஜ்

பரியேறும் பெருமாள் படம் பாரிஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு மூன்று விருதுகளைத் தட்டி சென்றது. சென்னை: பரியேறும் பெருமாள் படம் பாரிஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு மூன்று விருதுகளைத் தட்டி சென்றது. இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் பரியேறும் பெருமாள். இதில்,கதிர் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்திருந்தார். இவர்களுடன் யோகிபாபு, லிஜீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாதிய ஒடுக்கு முறையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் வசூல் மட்டும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமின்றி
 

பரியேறும் பெருமாள் படம் பாரிஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு மூன்று விருதுகளைத் தட்டி சென்றது.

சென்னை: பரியேறும் பெருமாள் படம் பாரிஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு மூன்று விருதுகளைத் தட்டி சென்றது.

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் பரியேறும் பெருமாள். இதில்,கதிர் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்திருந்தார். இவர்களுடன் யோகிபாபு, லிஜீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

சாதிய ஒடுக்கு முறையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் வசூல் மட்டும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமின்றி அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைத்துறையில் உள்ள பலரும் இப்படத்திற்குப் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாகக் கருப்பி என்ற நாய் வரும் காட்சிகள் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. 

இந்நிலையில் தேசிய அளவில் பிரமாண்ட வரவேற்பைப் பெற்ற பரியேறும் பெருமாள் படத்திற்காக, இயக்குநர் மாரி செல்வராஜ் பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அங்கு அவரின் திறமையைப் பாராட்டி மூன்று விருதுகள் வழங்கப்பட்டது. 

விருதுகளின் விவரங்கள்:-

இந்தியாவின் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் (Fcci)
 jury Award (special mention)
பார்வையாளர் விருது (audience award)