×

விபத்தில் ‘மெகா சீரியல்’ புகைப்பட கலைஞர் பலி: பிரபல நடிகர் படுகாயம்!

அழகர் சாமியின் குதிரை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கொம்பன் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் ஆவார் தேனி: தேனி அருகே நடந்த விபத்தில், தொலைக்காட்சி தொடரின் கேமராமேன் சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோம்பையில் தனியார் தொலைக்காட்சியின் சீரியல் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்புக்காக காரில் சென்று கொண்டிருந்த அவர்கள் கோம்பை ரெங்கநாதர் கோவில் சாலையில் சென்ற போது கார் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த ஸ்டில் போட்டோகிராஃபர் சிவா
 

அழகர் சாமியின் குதிரை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கொம்பன் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர்  ஆவார்

தேனி: தேனி அருகே நடந்த  விபத்தில், தொலைக்காட்சி தொடரின் கேமராமேன் சிவா சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோம்பையில் தனியார் தொலைக்காட்சியின் சீரியல் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்புக்காக காரில் சென்று கொண்டிருந்த அவர்கள்  கோம்பை ரெங்கநாதர் கோவில் சாலையில் சென்ற போது  கார் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த ஸ்டில் போட்டோகிராஃபர்  சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நடிகர் தவசி காயமடைந்தார். அவர் உத்தம பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தவசி அழகர் சாமியின் குதிரை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கொம்பன் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர்  ஆவார். 

இதை தொடர்ந்து  இறந்த  சிவாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மெகாத்தொடர் குழுவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.