×

வித்தியாசமாக கேக் வெட்டி படப்பிடிப்பு துவங்கிய விஜய் சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகயுள்ள புதிய திரைப்படம் இன்று கேக் வெட்டி தொடங்கியுள்ளது. சென்னை: நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகயுள்ள புதிய திரைப்படம் இன்று கேக் வெட்டி தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு வெற்றிப்படங்களைக் குவித்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போலவே வெற்றி நாயகனாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நடிப்பில் உருவான மாமனிதன் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் தனது அடுத்த பட பிடிப்பை நோக்கி நகர்ந்துள்ளார். விஜயா புரடொக்சன்ஸ் தயாரிப்பில் வாலு, ஸ்கெட்ச் போன்ற படங்களை இயக்கிய விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் . இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கேக் வெட்டி ஹைதராபாத்தில் தொடங்கியது.
 

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகயுள்ள புதிய திரைப்படம் இன்று கேக் வெட்டி தொடங்கியுள்ளது.

சென்னை: நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகயுள்ள புதிய திரைப்படம் இன்று கேக் வெட்டி தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு வெற்றிப்படங்களைக் குவித்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போலவே வெற்றி நாயகனாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நடிப்பில் உருவான  மாமனிதன் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் தனது அடுத்த பட பிடிப்பை நோக்கி நகர்ந்துள்ளார். 

விஜயா புரடொக்சன்ஸ் தயாரிப்பில் வாலு, ஸ்கெட்ச் போன்ற படங்களை இயக்கிய விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் . இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கேக் வெட்டி ஹைதராபாத்தில் தொடங்கியது. இதில் விஜய்சேதுபதிக்கு சூரி கேக் ஊட்டிவிடும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

மேலும் இதில் நாசர், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜான் விஜய், சீமான், மாரிமுத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.