×

விஜய்யை பயமுறுத்திய ரசிகர்! வைரலாகும் வீடியோ!

தளபதி 63 படப்பிடிப்பில் விஜய் ரசிகர் ஒருவர் ஓடிவந்து பாய்ந்து வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. சென்னை: தளபதி 63 படப்பிடிப்பில் விஜய் ரசிகர் ஒருவர் ஓடிவந்து பாய்ந்து வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். மேலும் இதில் கதிர்,யோகி பாபு, விவேக்,ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு
 

தளபதி 63 படப்பிடிப்பில் விஜய் ரசிகர் ஒருவர் ஓடிவந்து பாய்ந்து வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

சென்னை: தளபதி 63 படப்பிடிப்பில் விஜய் ரசிகர் ஒருவர் ஓடிவந்து பாய்ந்து வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். மேலும் இதில் கதிர்,யோகி பாபு, விவேக்,ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போது அவரது ரசிகர்கள் பலரும் அவரை காண வருவது வழக்கமான ஒன்று ஆகிவிட்டது . அந்த வகையில் இம்முறை ரசிகர் ஒருவர் அங்கு இருந்த தடுப்புகள் அனைத்தையும் மீறி விஜய் அருகே வந்துள்ளார். திடீரென்று ஒருவர் ஓடி வருவதை பார்த்து பயந்துபோன விஜய் பின்னர் அந்த ரசிகருக்கு கைகொடுத்துவிட்டு அங்கிருந்து தனது காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: கணவனுக்குத் தெரியாமல் காதலனுடன், உறவு வைத்து கொள்வது தப்பில்லை ! நடிகை சமந்தா வக்காலத்து!?