×

விஜய்யை திருமணம் செய்து கொள்ள ஆசை: நடிகை ரைசா ஓபன் டாக்!

நடிகை ரைசா, தளபதி விஜய் மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரக்கொண்டாவை திருமணம் செய்து கொள்ள ஆசை என்று கூறியுள்ளார். சென்னை: நடிகை ரைசா, தளபதி விஜய் மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரக்கொண்டாவை திருமணம் செய்து கொள்ள ஆசை என்று கூறியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களைக் கவர்ந்தவர் ரைசா வில்சன். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஐபி 2, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து நடிகர் ஹரிஷ்
 

நடிகை ரைசா, தளபதி விஜய் மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரக்கொண்டாவை திருமணம் செய்து கொள்ள ஆசை என்று கூறியுள்ளார். 

சென்னை: நடிகை ரைசா, தளபதி விஜய் மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரக்கொண்டாவை திருமணம் செய்து கொள்ள ஆசை என்று கூறியுள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களைக் கவர்ந்தவர் ரைசா வில்சன். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஐபி 2, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் நாயகியாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

 

அப்படம் மாபெரும் வெற்றியானதையடுத்து தற்போது அலைஸ் மற்றும் காதலிக்க யாருமில்லை என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சினிமா துறையில் நீங்கள் திருமணம் செய்ய நினைக்கும் நபர் யார் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் தளபதி விஜய் மற்றும் விஜய் தேவரக்கொண்டா ஆகியோரின் பெயரைத் தெரிவித்துள்ளார்.