×

விஜய்க்கு வந்த சோதனை: சர்காரை தொடர்ந்து நீதிமன்றம் சென்ற தளபதி 63!

நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 63 திரைப்படம் மீது உரிமையியல் நீதிமன்றத்தில் புகார் தொடரப்பட்டுள்ளது சென்னை: நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 63 திரைப்படம் மீது உரிமையியல் நீதிமன்றத்தில் புகார் தொடரப்பட்டுள்ளது. ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து 3 வது முறையாக அட்லி-விஜய் காம்போவில் ‘தளபதி 63’ திரைப்படம் உருவாகவுள்ளது. ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில்
 

நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 63 திரைப்படம் மீது உரிமையியல் நீதிமன்றத்தில் புகார் தொடரப்பட்டுள்ளது

சென்னை: நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 63 திரைப்படம் மீது உரிமையியல் நீதிமன்றத்தில் புகார் தொடரப்பட்டுள்ளது. 

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து 3 வது முறையாக அட்லி-விஜய் காம்போவில் ‘தளபதி 63’ திரைப்படம் உருவாகவுள்ளது. ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். 

மேலும் இப்படத்தில் கதிர்,யோகி பாபு,விவேக்,ஆனந்தராஜ் என்று ஒரு பட்டாளமே நடித்து வருகின்றனர். அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் குறும்பட இயக்குநர் செல்வா, தளபதி 63 படத்தின் கதை தன்னுடையது என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘பெண்கள் கால் பந்தாட்டத்தை மையமாக கொண்டு நான் 265 பக்கங்கள் கொண்ட கதையை எழுதினேன். அந்த கதையை தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து, சில படத் தயாரிப்பு நிறுவனங்களிடமும் தெரிவித்திருந்தேன். 

இந்நிலையில் அட்லீ இயக்கி வரும் ‘தளபதி 63’ படம் என்னுடைய கதையுடன் ஒத்துப்போவதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். பின்னர் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்தேன். அந்த புகாரின் மீது ஆலோசனை நடத்திய சங்கம், நான் உறுப்பினராகி 6 மாதங்கள் ஆனால் மட்டுமே கதை திருட்டு தொடர்பான புகாரை எடுத்துக் கொள்ள முடியும் என கூறி என்னுடைய புகாரை நிராகரித்தனர். அகையால்  ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்புக்குத் தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கு வருகிற 23-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. 

முன்னதாக நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படத்தின் மீதும் இயக்குநர் வருண் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.