×

விஜய்64 படத்தில் விஜய் ரோல் இதுதானாம்?

நடிகர் விஜய்யுடன் இணைந்தது மகிழ்ச்சி. லலித் குமார் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நெஞ்சார்ந்த நன்றி விஜய் 64 படத்தில் விஜய் நடிக்கவுள்ள கதாபாத்திரம் குறித்த தகவல் கசிந்துள்ளது. பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இவர் தற்போது கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் விஜய் 64 படத்தின் முதற்கட்ட பணிகளை அடுத்த மாதம் துவக்கவுள்ளார். இந்தப் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இதுகுறித்து கூறியுள்ள அவர், “ நடிகர் விஜய்யுடன் இணைந்தது
 

நடிகர் விஜய்யுடன் இணைந்தது மகிழ்ச்சி. லலித் குமார் மற்றும் இயக்குநர்  லோகேஷ்  கனகராஜுக்கு  நெஞ்சார்ந்த நன்றி

விஜய் 64 படத்தில் விஜய் நடிக்கவுள்ள கதாபாத்திரம் குறித்த தகவல் கசிந்துள்ளது. 

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை  மாநகரம் பட இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இவர் தற்போது கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் விஜய் 64 படத்தின் முதற்கட்ட பணிகளை அடுத்த மாதம் துவக்கவுள்ளார்.

இந்தப் படத்தில்  விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இதுகுறித்து கூறியுள்ள அவர், “ நடிகர் விஜய்யுடன் இணைந்தது மகிழ்ச்சி. லலித் குமார் மற்றும் இயக்குநர்  லோகேஷ்  கனகராஜுக்கு  நெஞ்சார்ந்த நன்றி” என்று கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் சாந்தனு, மாளவிகா மோகனன் உட்பட பலர்  நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்நிலையில் விஜய் 64 படத்தில் விஜய் பேராசிரியராக நடுத்தர வயதுள்ள  கேரக்டரில்  நடிப்பதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக விஜய் நடித்துள்ள பிகில்  படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.