×

விஜய் வீட்டில் ஐடி ரெய்டு… அப்பவே ‘தல’ அஜித் சொன்ன கருத்துக்களை பாருங்க!

வீட்டிலும் சோதனை நடத்தினர். இதில் 300 கோடி ரூபாய் வரை வரிஏய்ப்பு நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிகில் பட வரிஏய்ப்புக்காக நடிகர் விஜய் வீட்டில் கடந்த 23 மணிநேரங்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில் அங்கு சென்ற வருமான வரித்துறையினர் விஜய்யிடம் விசாரணை நடத்தினர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #WeStandwithThalapathyVijay என ஹேஷ்டேக்கை
 

வீட்டிலும் சோதனை நடத்தினர். இதில் 300 கோடி ரூபாய் வரை வரிஏய்ப்பு நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிகில்  பட வரிஏய்ப்புக்காக நடிகர் விஜய் வீட்டில்  கடந்த 23 மணிநேரங்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம்  மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில்  அங்கு சென்ற வருமான வரித்துறையினர்  விஜய்யிடம்  விசாரணை நடத்தினர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

 

இதனால் விஜய்   ரசிகர்கள் டிவிட்டரில் #WeStandwithThalapathyVijay என ஹேஷ்டேக்கை  டிரெண்டாக்கி  அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். அதேபோல் பைனான்சியர் அன்புச் செழியன் வீட்டிலும் சோதனை நடத்தினர். இதில் 300 கோடி ரூபாய் வரை வரிஏய்ப்பு நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வருமானவரிச் சோதனை குறித்து நடிகர் அஜித் தெரிவித்த பழைய கருத்துக்கள் சமூகவலைதளங்களில்  தற்போது வைரலாகி வருகிறது.  

அதாவது அஜித் வீட்டில் ஒருமுறை நடந்த வருமானவரி சோதனை குறித்து பேட்டியளித்த அவர், வீட்டில் பாதி பொருட்களை  எங்கு வைத்தோம் என்பது தெரியாமல் இருந்தது.  வருமான வரிச் சோதனையில் காணாமல்போன பொருட்கள்  மீண்டும் கிடைத்து விட்டன. இதனால் மகிழ்ச்சி அடைகிறேனே தவிர எனக்கு எந்தவித அதிர்ச்சியும் ஏற்படவில்லை. நான் தவறான முறையில் எதையுமே வைத்திருக்கவில்லை’ என்றார். தற்போது இந்த பேட்டிதான்  டிரெண்டிங்கில் உள்ளது. 

அதேபோல் சுங்கவரி மற்றும் வரிகளை உயர்த்த வேண்டாம். அதற்கு பதிலாக  பெரிய ஆட்கள்  மற்றும் பிரபலங்களின் வீடுகளை ஆய்வு செய்ய வேண்டும் . மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் அதை திருப்பிச் செலுத்த வேண்டும். அதை செய்தாலே நாட்டிலுள்ள பாதி பிரச்னை தீர்ந்துவிடும்  என்ற பேசிய பேட்டியும் வேகமாக பரவிவருகிறது.