×

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா படப்பிடிப்பு நிறைவு! 

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா இணைந்து நடித்து வரும் டியர் காம்ரேட் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். சென்னை: விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா இணைந்து நடித்து வரும் டியர் காம்ரேட் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அதில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் பாடல் மூலம் பல காதல் ஜோடிகளை தன் வசப்படுத்திய இவர்கள் அப்படத்தையடுத்து தற்போது டியர் காம்ரேட் படத்தில்
 

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா இணைந்து நடித்து வரும் டியர் காம்ரேட் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். 

சென்னை: விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா இணைந்து நடித்து வரும் டியர் காம்ரேட் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். 

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அதில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் பாடல் மூலம் பல காதல் ஜோடிகளை தன் வசப்படுத்திய இவர்கள் அப்படத்தையடுத்து தற்போது டியர் காம்ரேட் படத்தில் நடித்து வருகின்றனர். 

பரத் கம்மா இயக்கிவரும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிவு அடைந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து அடுத்த மாதம் 31ம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர். 

மேலும் இதை படக்குழு பார்டி வைத்துக் கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.