×

விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க இயக்குநர் படுக்கைக்கு அழைத்தார்: ரசிகர்களிடம் புலம்பி தீர்த்த பிரபல நடிகை 

விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க இயக்குநர் படுக்கைக்கு அழைத்தார் என்று நடிகை ஷாலு ஷாமு கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க இயக்குநர் படுக்கைக்கு அழைத்தார் என்று நடிகை ஷாலு ஷாமு கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் காதலியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. அந்த படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில
 

விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க இயக்குநர் படுக்கைக்கு அழைத்தார் என்று நடிகை ஷாலு ஷாமு கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க இயக்குநர் படுக்கைக்கு அழைத்தார் என்று நடிகை ஷாலு ஷாமு கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் காதலியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. அந்த படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில  படங்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தனது ரசிகர்களிடம் உரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் மீடூவால் பாதிக்கபட்டுள்ளீர்களா என்று கேள்வி கேட்டார். அப்போது அதற்கு பதில் அளித்த ஷாலு ‘ ஒரு முறை விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குநர் ஒருவர் என்னை நடிக்க அழைத்தார். ஆனால் அதற்கு அவருடன் படுத்தல் மட்டுமே வாய்ப்பு தருவான் என்றார். அதனை நான் வெளியில் சொல்லவில்லை ‘ என்று கூறியுள்ளார்.