×

விஜய் சேதுபதி படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து!

விஜய் சேதுபதி, சிரஞ்சீவி இணைந்து நடித்து வரும் `சயீரா நரசிம்ம ரெட்டி’ படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது விஜய் சேதுபதி, சிரஞ்சீவி இணைந்து நடித்து வரும் `சயீரா நரசிம்ம ரெட்டி’ படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ராம் சரண் தயாரிப்பில் நடிகர் விஜய் சேதுபதி,சிரஞ்சீவி இணைந்து நடித்து வரும் திரைப்படம் சயீரா நரசிம்ம ரெட்டி. அமிதாப்பச்சன்,ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, `நான் ஈ’ சுதீப் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வரும்
 

விஜய் சேதுபதி, சிரஞ்சீவி இணைந்து நடித்து வரும் `சயீரா நரசிம்ம ரெட்டி’ படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது

விஜய் சேதுபதி, சிரஞ்சீவி இணைந்து நடித்து வரும் `சயீரா நரசிம்ம ரெட்டி’ படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   

ராம் சரண் தயாரிப்பில் நடிகர் விஜய் சேதுபதி,சிரஞ்சீவி இணைந்து நடித்து வரும் திரைப்படம் சயீரா நரசிம்ம ரெட்டி. அமிதாப்பச்சன்,ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, `நான் ஈ’ சுதீப் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இந்த படத்திற்கான பிரமாண்ட செட் ஆந்திர மாநிலம், கோக்காபேட்டையில் உள்ள சிரஞ்சீவிக்குச் சொந்தமான பண்ணைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்தது.  சிரஞ்சீவி கடந்த ஒரு மாதமாக வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தில் இருப்பதால் அந்த செட் அப்படியே வைக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இன்று அதிகாலை திடிரென்று இந்த பிரமாண்ட செட்டில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை  கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.