×

விஜய், அஜித் அரசியலுக்கு வருவார்களா? கணித்து சொல்லும் ட்ரெண்டிங் ஜோதிடர் 

விஜய், அஜித் அரசியலுக்கு வருவார்களா என்று பிரபல ஜோதிடர் கணித்துக் கூறியுள்ளார். சென்னை: விஜய், அஜித் அரசியலுக்கு வருவார்களா என்று பிரபல ஜோதிடர் கணித்துக் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுடன் இந்தியா தோல்வி அடையும் என்று பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்திருந்தார். அவர் கணித்த படியே இந்தியா தோல்வியைத் தழுவியது. அதே போல் உலகக் கோப்பையை, இதுவரை வெல்லாத அணியே கைப்பற்றும்
 

விஜய், அஜித் அரசியலுக்கு வருவார்களா என்று பிரபல ஜோதிடர் கணித்துக் கூறியுள்ளார்.

சென்னை: விஜய், அஜித் அரசியலுக்கு வருவார்களா என்று பிரபல ஜோதிடர் கணித்துக் கூறியுள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுடன் இந்தியா தோல்வி அடையும் என்று பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்திருந்தார். அவர் கணித்த படியே இந்தியா தோல்வியைத் தழுவியது. அதே போல் உலகக் கோப்பையை, இதுவரை வெல்லாத அணியே கைப்பற்றும் என்று கூறியிருந்தார். 

அதுமட்டுமின்றி அரசியல் உலகில் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆவார் என்றும் மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி என்று இன்னும் இவர் கூறிய ஏராளமான விஷயம் அப்படியே நடந்து விட்டதால் தற்போது இவர் தான் செம ட்ரெண்டிங்கில் உள்ளார். 

இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் விஜய் மற்றும் அஜித் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, ‘விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர மாட்டார்.  ஆனால் தொடர்ந்து அவரது மன்றங்கள் மூலம் நல்லது செய்து கொண்டே இருப்பார். மேலும் விஜய் நடித்து வரும் பீகில் திரைப்படம் கண்டிப்பாக அவரது கேரியரில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்’ என்றார். தொடர்ந்து அஜித் பற்றி கூறுகையில், ‘இவரும் அரசியலுக்கு வர மாட்டார். மேலும் இனிமேல் தரமான மக்கள் பிரச்சினைகளுக்கான படங்களைத் தேர்வு செய்து நடிப்பார்’ என்று கூறியுள்ளார். இவரின் இந்த கணிப்பைக் கேட்டு இரு தரப்பு ரசிகர்களும் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.