×

வாத்திங் கம்மிங் டூ தீபாவளி… மாலை 6 மணிக்கு மாஸ்டர் டீசர்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படப்பிடிப்பு 129 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து பிப்ரவரி இறுதியில் பட வேலைகள் நிறைவடைந்தது. கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவலால் நாடு முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் மாஸ்டர் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. 6 மாத காலமாகியும் திரையரங்குகள் திறக்கப்படாததால் நஷ்டத்தை தவிர்க்க ஓடிடியில் மாஸ்டர் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது,
 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படப்பிடிப்பு 129 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து பிப்ரவரி இறுதியில் பட வேலைகள் நிறைவடைந்தது. கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவலால் நாடு முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் மாஸ்டர் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது.

6 மாத காலமாகியும் திரையரங்குகள் திறக்கப்படாததால் நஷ்டத்தை தவிர்க்க ஓடிடியில் மாஸ்டர் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது, ஆனால் மாஸ்டர் படம் ஓடிடியில் நிச்சயம் வெளியாகாது என படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் மாஸ்டர் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என விஜய்யின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட அப்டேட் கொடு லோகு என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் செய்து ரசிகர்கள் அதகளப்படுத்தினர்.

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக இன்று காலை இதுவரையிலான காத்திருப்பு முடிந்தது, வாத்தி வருகிறார் என்ற வாசகத்துடன் பட தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டது குறிப்பிடதக்கது.