×

வாத்தி கமிங்… தெறிக்கவிடப்போகும் மாஸ்டர் செகண்ட் சிங்கிள் ரிலீஸ்! 

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன் உள்ளிட்ட பலர்
 

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, சென்னை, நெய்வேலியில் நடைபெற்றது. மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு படத்தின் இசைவெளியீட்டு விழா நேரலையாக ஒளிபரப்படும் என்று சன்டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின்  இரண்டாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே விஜய் பாடியிருந்த குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது பாடலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.