×

வாக்கிங் செல்லும் போது விபத்தில் சிக்கிய பிரபல இயக்குநர் சுசீந்திரன்

செய்தி கூறவேண்டும் என்றால் அதை தன் கைப்பட பேப்பரில் எழுதி இணையத்தில் வெளியிடுவது சுசீந்திரனின் ஸ்பெஷல். வெண்ணிலாக் கபடி குழு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். பின்னர் நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, வில் அம்பு,மாவீரன் கிட்டு உள்ளிட்ட வெற்றி படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். இயக்குநராக ரவுண்டு வந்த இவர் தற்போது சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அண்மையில் இவரது இயக்கத்தில் சாம்பியன் படம் வெளியானது. தனது ரசிகர்களுக்குச்
 

செய்தி கூறவேண்டும் என்றால் அதை தன் கைப்பட பேப்பரில் எழுதி இணையத்தில் வெளியிடுவது சுசீந்திரனின் ஸ்பெஷல். 

வெண்ணிலாக் கபடி குழு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். பின்னர் நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, வில் அம்பு,மாவீரன் கிட்டு  உள்ளிட்ட வெற்றி  படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். இயக்குநராக ரவுண்டு வந்த இவர் தற்போது  சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அண்மையில் இவரது இயக்கத்தில் சாம்பியன் படம் வெளியானது. தனது ரசிகர்களுக்குச் செய்தி கூறவேண்டும் என்றால் அதை தன் கைப்பட பேப்பரில் எழுதி இணையத்தில் வெளியிடுவது சுசீந்திரனின் ஸ்பெஷல். 

இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரன் இன்று காலை வாக்கிங் சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளார்.  இவர் வாகனம் ஒன்று வேகமாக வந்து மோதியதில் இவரின் இடது கை  எலும்பு முறிந்துள்ளது. அதனால் உடனடியாக  அவருக்கு லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் சுசீந்திரனை  மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் சுசீந்திரன் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்த நடிகர் சங்கம் தொடர்பான வழக்குகளில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.. அதில் நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்து உயர் நீதிமன்ற நீதிபதி  உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ்  நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.