×

வலியும்,வேதனையும் வர்ணிக்க வார்த்தையே இல்லை: ஜே.கே.ரித்திஷின் மரணம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி உருக்கம்!

ஜே.கே.ரித்திஷின் மரண செய்தி கேட்டு வலியும்,வேதனையும் வர்ணிக்க வார்த்தையே இல்லை என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார். சென்னை: ஜே.கே.ரித்திஷின் மரண செய்தி கேட்டு வலியும்,வேதனையும் வர்ணிக்க வார்த்தையே இல்லை என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார். சின்னபுள்ள படத்தில் நடிகராக அறிமுகமானவர் ஜே.கே.ரித்திஷ்.திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலின் பேரனான இவர் கடந்த 2009ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். அதையடுத்து 2016ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தார். மேலும் திரையுலகில் சில படங்கள் நாயகனாக நடித்துள்ளார். நடிகர் ஆர்ஜே பாலாஜியுடன் இவர் நடித்திருந்த ‘எல்கேஜி‘ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் அரசியல்வாதியாக
 

ஜே.கே.ரித்திஷின் மரண செய்தி கேட்டு வலியும்,வேதனையும் வர்ணிக்க வார்த்தையே இல்லை என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.

சென்னை: ஜே.கே.ரித்திஷின் மரண செய்தி கேட்டு வலியும்,வேதனையும் வர்ணிக்க வார்த்தையே இல்லை என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.

சின்னபுள்ள படத்தில் நடிகராக அறிமுகமானவர் ஜே.கே.ரித்திஷ்.திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலின் பேரனான இவர் கடந்த  2009ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். அதையடுத்து 2016ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தார். 

மேலும் திரையுலகில்  சில படங்கள் நாயகனாக நடித்துள்ளார்.  நடிகர் ஆர்ஜே பாலாஜியுடன் இவர் நடித்திருந்த எல்கேஜிபடம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் அரசியல்வாதியாக மிடுக்கான வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் பேசிய வசனங்களுக்குத் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள போகளூரில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக நேற்று காலை பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று ஜே.கே.ரித்தீஷூக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரது மரணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, ‘ஜே.கே. ரித்தீஷின் திடீர் இறப்பால் அதிர்ச்சியடைந்து நொறுங்கிவிட்டேன். இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அவருக்கு வயது 46 தான் ஆகிறது. இவ்வளவு சிறு வயதிலா மரணம்? அவர் எனக்கு சகோதரர் போன்றவர். பலரது வாழ்க்கையை மாற்ற உதவியவர். வலியையும் வேதனையையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லைஎன்று பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் காலமானார்!