×

வலிய சாவைத் தேடிய ஸ்டில்ஸ் `சிவா’ | கதறி அழும் நடிகர் தவசி!

தமிழ்த் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்கள் பலரது படங்களில் புகைப்படக் கலைஞராக பணியாற்றியவர் சிவக்குமார் என்கிற ஸ்டில்ஸ் சிவா. இவர் பணியாற்றிய பல படங்களில் அறிமுக இயக்குனர்களாக முதல் படத்தை இயக்கியவர்கள் பலரும் இன்று பிரபலமான இயக்குநர்களின் வரிசையில் வலம் வருகிறார்கள். இவர், தேனி மாவட்டம் கோம்பை அருகே உள்ள ரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற சின்னத்திரை ஒன்றின் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு இருந்தார். தமிழ்த் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்கள் பலரது படங்களில் புகைப்படக் கலைஞராக பணியாற்றியவர்
 

தமிழ்த் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்கள் பலரது படங்களில் புகைப்படக் கலைஞராக பணியாற்றியவர் சிவக்குமார் என்கிற ஸ்டில்ஸ் சிவா.  இவர் பணியாற்றிய பல படங்களில் அறிமுக இயக்குனர்களாக முதல் படத்தை இயக்கியவர்கள் பலரும் இன்று பிரபலமான இயக்குநர்களின் வரிசையில் வலம் வருகிறார்கள். இவர், தேனி மாவட்டம் கோம்பை அருகே உள்ள ரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற சின்னத்திரை ஒன்றின் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு இருந்தார். 

தமிழ்த் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்கள் பலரது படங்களில் புகைப்படக் கலைஞராக பணியாற்றியவர் சிவக்குமார் என்கிற ஸ்டில்ஸ் சிவா.  இவர் பணியாற்றிய பல படங்களில் அறிமுக இயக்குனர்களாக முதல் படத்தை இயக்கியவர்கள் பலரும் இன்று பிரபலமான இயக்குநர்களின் வரிசையில் வலம் வருகிறார்கள். இவர், தேனி மாவட்டம் கோம்பை அருகே உள்ள ரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற சின்னத்திரை ஒன்றின் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு இருந்தார். 

நேற்று ரங்கநாதர் கோயிலில் படப்பிடிப்பு முடிந்ததும் கோம்பையில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு நடிகர் தவசியும், அவரது உதவியாளரும் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.  படப்பிடிப்பு முடிவுற்றதால், தங்கும் விடுதிக்கு தானும் வருவதாக கூறி, தானே வலிய சென்று நடிகர் தவசியுடன் காரில் சிவா ஏறியிருப்பதாக சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு நடந்த இடத்தில் இருந்து நடிகர் தவசி காரை ஓட்டி வந்துள்ளார். அதிவேகம் காரணமாக ரெட்டை புளியமரம் என்ற இடத்தில் கார், தனது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஸ்டில்ஸ் சிவா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிவா, உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த தவசி உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.
சின்னத்திரை சீரியல் தயாரிப்பு நிறுவனத்தின் மேனேஜரிடம் புகார் பெற்று, அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனத்தை இயக்கி உயிர்பலி ஏற்படுத்தியதாக தவசி மீது கோம்பை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

“நானும், என் உதவியாளரும், ஸ்டிஸ்ல்  சிவாவும் காரில் வந்துகொண்டிருந்தோம். எங்களுக்குப் பின்னாலும் முன்னாலும் வாகனங்கள் சென்றுக் கொண்டே இருந்தன. திடீரென சாலை ஓரத்தில் இருந்த நாய்கள் கூட்டம் சண்டை போட்டுக் கொண்டே சாலை நடுவே வந்து விட்டது. சட்டென பிரேக் பிடித்த போது வண்டி தலைகீழாக உருண்டது. `சிவா’னு அவர் கையைப் பிடித்தேன். வேகமாகக் கார் உருண்டதால் கீழே விழுந்து விட்டார். இரண்டு மூன்று முறை கார் உருண்டு நின்றது. அதிர்ஷ்டவசமாக நாங்கள் உயிர்  தப்பினோம்… ஆனால், சிவா…!” என்றார் கதறி அழுகிறார் நடிகர் தவசி