×

‘வலிமை’ படத்தில் இணைந்த நடிகை நஸ்ரியா

ஃபகத் ஃபாசில் நடித்த ‘கூடே’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கியுள்ளார் நஸ்ரியா. நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் நடிகை நஸ்ரியா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ‘நேரம்’, ‘நய்யாண்டி’, ‘திருமணம் எனும் நிக்கா’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நஸ்ரியா. மலையாளத்தில் இயக்குநர் அஞ்சலி மேனன் இயக்கிய ‘பெங்களூர் டேஸ்’ திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்துக் கொண்டு நடிப்புக்கு
 

ஃபகத் ஃபாசில் நடித்த ‘கூடே’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கியுள்ளார் நஸ்ரியா.

நடிகர் அஜித்தின் வலிமை படத்தில்  நடிகை நஸ்ரியா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழில் ‘நேரம்’, ‘நய்யாண்டி’, ‘திருமணம் எனும் நிக்கா’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நஸ்ரியா. மலையாளத்தில் இயக்குநர் அஞ்சலி மேனன் இயக்கிய ‘பெங்களூர் டேஸ்’ திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்துக் கொண்டு நடிப்புக்கு முழுக்குப் போட்டார். சமீபத்தில்  ஃபகத் ஃபாசில் நடித்த ‘கூடே’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கியுள்ளார் நஸ்ரியா.

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தில் நடிகை  நஸ்ரியா முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும்  இப்படத்தை இயக்குநர்  ஹெச். வினோத் இயக்குகிறார்.  இப்படத்தில் நஸ்ரியா அஜித்தின் தங்கையாக நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் பூஜை  சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இதன் படப்பிடிப்பு  வரும் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.