×

வனிதாவின் பெயரை டாட்டூவாக குத்தியதற்கு காரணம் சொன்ன டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்!

வனிதாவி பெயரை கையில் பச்சை குத்தியதற்கான காரணத்தை டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் தெரிவித்துள்ளார். வனிதாவின் பெயரை கையில் பச்சை குத்தியதற்கான காரணத்தை டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் தெரிவித்துள்ளார். வனிதா விஜயகுமார் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததிலிருந்தே அவரை கடந்த கால வாழ்க்கை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக அவருக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுக்கும் இடையேயான உறவு குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து ஏற்கனவே விளக்கமளித்த டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ‘ எனக்கும் வனிதாவுக்கு எந்த நடிகர்
 

வனிதாவி பெயரை கையில் பச்சை குத்தியதற்கான காரணத்தை  டான்ஸ்  மாஸ்டர் ராபர்ட் தெரிவித்துள்ளார். 

வனிதாவின் பெயரை கையில் பச்சை குத்தியதற்கான காரணத்தை  டான்ஸ்  மாஸ்டர் ராபர்ட் தெரிவித்துள்ளார். 

வனிதா விஜயகுமார் பிக் பாஸ்  வீட்டுக்குள் நுழைந்ததிலிருந்தே அவரை கடந்த கால வாழ்க்கை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக அவருக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுக்கும் இடையேயான உறவு குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றன. 

இதுகுறித்து ஏற்கனவே விளக்கமளித்த  டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ‘ எனக்கும் வனிதாவுக்கு எந்த நடிகர் தயாரிப்பாளர் என்ற உறவை தாண்டி  எதுவும் கிடையாது. அவருக்கு பப்ளிசிட்டி என்றால் மிகவும் பிடிக்கும். அவர் படத்தின் புரொமோஷனுக்காக சில புகைப்படங்கள் எடுத்தார். அதனால் எங்களுக்குள் உறவு இருக்கிறது என்று பலரும் நினைத்து விட்டார்கள். சில நேர்காணல்களில் அவர் என்னுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது போல தான் கூறினார். நான் பதறிப்போய் கேட்டதற்கு அப்படி சொன்னால் தான், நம் படத்தை பார்க்க மக்கள் வருவார்கள் என்றார். மற்றபடி எங்களுக்கிடையில் வேறு எந்தவிதமான நட்பும் இல்லை’ என்றார். 

இருப்பினும் தற்போது வனிதாவின் பெயரை ராபர்ட் தன் கையில் பச்சை  குத்தியுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால், ராபர்ட்  கையில் தற்போது அந்த டாட்டூ இல்லை. இது குறித்து தற்போது விளக்கமளித்துள்ள அவர், ‘ என்னை வைத்து படம் தயாரித்த  நன்றி கடனுக்காகத்  தான் நான் அவருடைய பெயரை டாட்டூவாக குத்தினேன். ஆனால், வனிதாவின் காதலர், ஏன் இதுமாதிரி டாட்டூ குத்தியுள்ளீர்கள் என்று என்னிடம் சத்தம் போட்டார். அதனால் நான் டாட்டூவை அழித்து விட்டேன்’ என்றார். வனிதாவின் காதலர் என்று ராபர்ட் யாரை குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. 

இருப்பினும் ராபர்ட் மாஸ்டரின் விளக்கத்திற்குக் கருத்து  தெரிவித்துள்ள நெட்டிசன்கள்,  இவருக்கு டான்ஸ் மாஸ்டராக வாய்ப்பு அளித்தவர்களின் பெயர்களை கூட பச்சை குத்தியிருக்கலாமே? ஏன்  அப்படி செய்யாமல் வனிதாவுக்கு மட்டும் நன்றி கடனை செலுத்தியுள்ளார்  என்று கிண்டல் செய்து வருகின்றனர்.