×

வதந்தி உண்மையானது: அஜித் படத்தில் நடிக்கிறார் ‘விக்ரம் வேதா’ யாஞ்சி

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் நடிப்பதாக பரவி வந்த வதந்தி உண்மையானது. சென்னை: எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் நடிப்பதாக பரவி வந்த வதந்தி உண்மையானது. ‘விக்ரம் வேதா’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஷ்ரதா. அதன்பிறகு வெகுசில படங்களில் மட்டுமே வாய்ப்பு வந்தது, அதுவும் சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை. இந்நிலையில் இவர் அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கிறார் என
 

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் நடிப்பதாக பரவி வந்த வதந்தி உண்மையானது.

சென்னை: எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் நடிப்பதாக பரவி வந்த வதந்தி உண்மையானது.

‘விக்ரம் வேதா’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஷ்ரதா. அதன்பிறகு வெகுசில படங்களில் மட்டுமே வாய்ப்பு வந்தது, அதுவும் சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை. இந்நிலையில் இவர் அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டது உண்மையாகியுள்ளது. 

பாலிவுட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘பின்க்’ படத்தை எச் வினோத் ரீமேக் செய்கிறார். இதில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கவுள்ளார். தற்போது ஷ்ரதாவுக்கு ஒரு மிக முக்கியமான கதாபாத்திரம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஷ்ரதா, “நான் அஜித் சாரின் அடுத்த படத்தில் (AK59) நடிப்பதாக இணையத்தில் வதந்தி பரவி வந்தது. தற்போது அந்த வதந்தி உண்மையாகி இருக்கிறது. ஆம், நானும் அந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்றுள்ளேன். அஜித் சார் உடன் நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.